சென்னையில் கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்; 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்பத்தூருக்கு கஞ்சா கடத்திவந்த அரசூர் கிராமத்தைசேர்ந்த நபர் கையும் களவுமாக கைது. 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை அம்பத்தூரில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளை செய்வதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வாகன சோதனை மூலம் கஞ்சா கடத்தல் ஈடுபட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் அம்பத்தூர் காவல்துறையினர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழுக்கம் அதிகம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ஐபிஎஸ் தலைமையில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அம்பத்தூர் ராக்கி சினிமா சிங்கப்பூர் ஷாப்பி அருகே அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன தணிக்கை செய்த பொழுது இருசக்கர வாகனத்தில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சாவை எடுத்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் வ / 25 என்பவர் என தெரிய வந்தது. பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் அடையாளம் தெரியாத நபருக்காக ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கஞ்சாவை இருசக்கர வாகனத்திலேயே எடுத்து வந்ததாக குற்றத்தை ஒப்புகொண்டார்.
மேலும், யாரிடம் கஞ்சாவை கொடுக்க அம்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்தார் என விவரம் எதுவும் இல்லையெனவும், இவர் மீது மதுராந்தகம், திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது. பின்னர் அவரின் இரண்டு சக்கர வாகனம், செல்போன் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிரபாகர் மீது வழக்கு பதிவுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்