மேலும் அறிய

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

Mayiladuthurai Kidnap News: மயிலாடுதுறை வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண்னை 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டு கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

Mayiladuthurai Kidnap Case: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் 34 வயதான  மகன் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். 

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

இந்த சூழலில் கடந்த ஜூலை 12 -ஆம் தேதி அப்பெண்ணை கடத்த விக்னேஸ்வரன் முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.  

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15 க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக  தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த  சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர். கடத்தல் சம்பவத்தையடுத்து தமிழகம்  முழுவதும் உள்ள காவல்நிலையங்களில்  உஷார் படுத்தினர். 

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!

அதனைத் தொடர்ந்து, இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாகனத்தை விழுப்புரம் அருகே விக்கிரவண்டி டோல்கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மடக்கி பிடித்து, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து, மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தலைமறைவாக உள்ள சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். வீடு புகுந்து வலுக்கட்டாயமாக இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Embed widget