Watch Video: ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற 60 சுற்றுலா பயணிகள் கொண்ட சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் சண்டிகரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற 60 சுற்றுலா பயணிகள் கொண்ட சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எதிர்பாராத இந்த பேருந்து தீப்பிடித்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு நல்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தானது குண்டலி- மனேசர் - பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அதற்குள் பேருந்து எரிந்து சாம்பலான நிலையில், பயணிகள் மத்தியில் அலறல் சத்தம் கேட்டது. அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் எப்படியோ சுற்றுலா பயணிகளை பஸ்சில் இருந்து மீட்டனர்.
हरियाणा-नूंह में टूरिस्ट बस में लगी आग. इस दौरान बस में करीब 60 लोग सवार थे, जिसमें से 8 लोगों की मौत हो चुकी है और 24 लोग घायल बताए जा रहा है.
— Nidhi solanki🇮🇳 (@iNidhisolanki) May 18, 2024
#Haryana #Nuh #Fire #busaccident #accident #news pic.twitter.com/O2uL8c9EBI
கிடைத்த தகவலின்படி, சுற்றுலா பேருந்தில் சுமார் 60 பேர் இருந்ததாகவும், அவர்கள் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பனாரஸ் மற்றும் பிருந்தாவனத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தனர். காயம் அடைந்த பக்தர்கள் சரோஜ் பஞ்ச் மற்றும் பூனம் இத்தகவலை தெரிவித்தனர். காயமடைந்த சுற்றுலா பயணிகளில் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் சபீர், நசீம் மற்றும் அவர்களது நண்பர்கள் கூறுகையில், ”பேருந்து பின்னால் இருந்து எரிந்து கொண்டிருந்ததாகவும், பயணிகள் அலறி துடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும், பைக்கில் பேருந்தை பின்தொடர்ந்த அவர்கள், டிரைவருக்கு தகவல் தெரிவித்து பஸ்சை நிறுத்தினர். பயணிகள் இறங்குவதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென எரிந்ததாகவும் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை வருவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு:
தீப்பற்றியதை ஓட்டுநர் கவனிக்கவில்லை என விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தி, தீயை அணைக்க முயன்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பயணிகள் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே, அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்த பேருந்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினார். அதன்பின், தவாடு சதர் காவல் நிலையம் காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜரானியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தவாடு எஸ்டிஎம் சஞ்சீவ் குமார், தவாடு சதர் காவல் நிலைய பொறுப்பாளர் ஜிதேந்திர குமார் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உடல்கள் எரிந்த நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.