Crime: காசு பணம் துட்டு மணி..! குப்பைத் தொட்டியில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம்...பெங்களூருவில் பகீர்!
பெங்களூரு ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: பெங்களூரு ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை தொட்டியில் கிடந்த 20 கோடி ரூபாய்
பெங்களூருவில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) அன்று ரயில் பாதையில் அருகே இருந்த குப்பை தொட்டியில் அசாதாரணமான ஒரு மூட்டை கிடந்தது. அப்போது, அங்கு வேலை செய்திருந்த ஒருவர், அந்த மூட்டையை திறந்த பார்த்தார். அதில், 3 மில்லியன் அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், போலீசார் இதனை கைப்பற்றி ஆர்பிஐக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலேமன். இவர் பெங்களூருவில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை, நாகவாரா ரயில் நிலையத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் அசாதாரணமான ஒரு மூட்டையை கண்டார். பின்னர், இதனை வீட்டில் மறைத்து வைத்து, இதுபற்றி யாரிடம் கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து, அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று இதுபற்றி தெரிவித்தார். இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "பெங்களூரு ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் கண்டுடெடுக்கப்பட்டது. 23 மூட்டைகளில் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை (25 கோடி ரூபாய்) கைப்பற்றி ஆர்பிஐக்கு அனுப்பப்பட்டது. முதலில் இதை போலியான நோட்டுகள் என்று நினைத்தோம். பின்னர், இதை ஆர்பிஐ ஆய்வு செய்து கூறுவதாக தெரிவித்தது. வழக்கமாக மோசடி செய்பவர்கள் இந்த போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, பணம் பரிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுவார்கள். எனவே, குப்பை தொட்டியில் கைப்பற்றப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போலியானதா? இல்லை உண்மையான நோட்டுகளா என்பதை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். குப்பை தொட்டியில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான டாலர் நோட்டுள் கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க