நிமிர்ந்து நில், துணிந்து சொல்: தாய்மாமன் மகளிடம் பாலியல் சீண்டல் - வாட்சஸ் ஆப் புகாரில் இளைஞரை சிக்க வைத்த சிறுமி
"நிமிர்ந்து நில் துணிந்து சொல்" என்ற திட்டத்தில் 89033 31098 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகார்களை அளிக்க கரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது’’
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கடந்த 26 ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கரூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக "நிமிர்ந்து நில் துணிந்து சொல்" என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ள அலைபேசி எங்களுடன் பிரத்தியேகமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டு இருந்தனர்.
அந்த வாட்ஸ்அப் எண்ணிற்க்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதுவிதமான புகார் ஒன்று வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போன உடனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்த புகார் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த புகாரின் அடிப்படையில் 15 வயது உடைய தாய் மாமன் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த செந்தில் என்ற 27 வயது இளைஞரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (27). இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இதே பகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் தனது மனைவியை பிரிந்து கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் பிரிந்து சென்ற மனைவியுடனும், இளைய மகளான 15 வயது சிறுமியுடன் பாட்டி வீட்டிலும் வசித்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.
உறவுக்கார பெண்ணான 15 வயது சிறுமியுடன் இயல்பாக பழகி வந்த நிலையில், சிறுமிக்கு இவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிறுமி செந்தில் மீது போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நள்ளிரவு செந்தில் கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நசீமா பானு அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூரில் புதிதாக தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற அமைப்பின் கீழ் வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அடிப்படையில் உறவுக்கார பெண்ணை பாலியல் சீண்டல் செய்த 27 வயது இளைஞனை கைது செய்த சம்பவம். இனியும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சிக்கு பெண்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் பெண்கள் தயக்கமின்றி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள வாட்ஸ் அப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு காண புகார்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.