சகோதரியிடம் சண்டை.. கண்டித்த தந்தையைக் கத்தியால் குத்திய சிறுவன்

புனேவில் சகோதரியுடன் சண்டையிட்டதை கண்டித்த தந்தையை 13 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள கத்ராஜ்-டேஹூ சாலை அருகே மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியில் வாட்ச்மேன் வேலை பார்த்துவந்துள்ளார். தனது மனைவி, இரு மகன்கள் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 40 வயதான அந்த வாட்ச்மேன் நேற்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது தனது மகளும், 13 வயது மகனும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அவர், உடனடியாக தனது மகளை அழைத்து கண்டித்து அனுப்பினார்.

பின்னர், தனது 13 வயது மகனை அழைத்து சகோதரியுடன் சண்டையிடக் கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனால், தந்தையின் கண்டிப்பால் கோபம் அடைந்த சிறுவன், உடனடியாக அவன் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவனது தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். திடீரென வாட்ச்மேனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சகோதரியுடன் சண்டையிட்டதை கண்டித்ததற்காக 13 வயது சிறுவன், தனது சொந்த தந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் செய்துள்ள அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Maharastra murder pune son father stab 13 year old

தொடர்புடைய செய்திகள்

Kaaka Thoppu Balaji : காக்கா தோப்பு பாலாஜி கைது : தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து கை, கால்களில் காயம்

Kaaka Thoppu Balaji : காக்கா தோப்பு பாலாஜி கைது : தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து கை, கால்களில் காயம்

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Sexual Harrasment | ஜிம் பயிற்சியாளர் பிரேம் பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் குற்றச்சாட்டு..!

Sexual Harrasment | ஜிம் பயிற்சியாளர் பிரேம் பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் குற்றச்சாட்டு..!

Youtuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்!

Youtuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

டாப் நியூஸ்

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!