Zomato | நாம ஒன்னு நினைச்சா.?! அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சொமேட்டோ.. என்னதான் பிரச்னை?
உணவு டெலிவரியில் கோலோச்சும் அந்நிறுவனம் தான் கையில் எடுத்த ஒரு முயற்சியை பாதியிலேயே கைவிடுவதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரியில் கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் சொமேட்டோ. அதிரடி ஆஃபர்கள், குறித்த நேரத்தில் செல்லும் உணவு என ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளது சொமேட்டோ. பெரிய நகரங்களில் தொடங்கப்பட்டாலும், தற்போது இரண்டாம் நிலை நகரங்களுக்கும் சொமேட்டோ சென்றடைந்துள்ளது. இப்படியாக உணவு டெலிவரியில் கோலோச்சும் அந்நிறுவனம் தான் கையில் எடுத்த ஒரு முயற்சியை பாதியிலேயே கைவிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிலைப்படுத்தி மளிகைப்பொருட்கள் டெலிவரி என்ற புதுசேவையை சோதனை முறையில் தொடங்கியது சொமேட்டோ. முக்கால் மணி நேரத்துக்குள் வீட்டிற்கே மளிகை பொருட்கள் வந்து சேரும் என்ற உத்திரவாதத்துடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.
இதற்காக மளிகை கடைகள் பலவற்றுடன் இணைந்து செயல்பட்டது சொமேட்டோ. பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் தொடங்கிய சேவையை தொடர்ந்து சோதனை முறையில் செய்து வந்தது சொமேட்டோ. இந்த நிலையில் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையை நிறுத்தப்போவதாக சொமேட்டா தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதியுடன் இந்த சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. திட்டமிட்டது போல வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், போட்டியாளர்களின் அதிகரிப்புமே இந்த முடிவை சொமேட்டா எடுக்கக் காரணமென கூறப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த சேவையால் ரு.356 கோடி நஷ்டம் என்றும் சொமேட்டா கணக்கு காட்டியுள்ளது.
Income Tax returns : 2021-22 வருமான வரி தாக்கல் செய்ய காலம் நீட்டிப்பு; முழுவிபரம் இதோ...!
முன்னதாக, இந்த மளிகை பொருட்களின் டெலிவரி சேவைக்காக க்ரோபர்ஸ் நிறுவனத்துடன் சொமேட்டோ கைகோக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உணவு டெலிவரியில் கலக்கும் சொமேட்டோ நிச்சயம் இதிலும் சாதிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில் சொமேட்டாவுக்கு போட்டியாகவும் சில நிறுவனங்கள் களமிறங்கின. பலமான போட்டி இருக்கப்போவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பின்வாங்கியுள்ளது சொமேட்டோ.
இதற்கிடையே ஹெல்த் அண்ட் பிட்னஸ் பொருட்களை டெலிவரி செய்யும் நியூட்ராகியூட்டிகல் வர்த்தகத்தையும் சொமேட்டோ மூடவுள்ளது. இப்படியாக தான் கைவத்த இரு புது திட்டங்களையும் சொமேட்டோ தற்போது கைவிடவுள்ளது. இது மேலோட்டமாக பார்த்தால் பின் வாங்கும் செயல்போல தெரிந்தாலும், இந்த அறிவிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் வரவேற்பே தெரிவித்துள்ளனர். லாபமில்லாத வர்த்தகத்தை மூடி, லாபமான பாதையில் அதிகம் கவனம் செலுத்துவது நிறுவனத்துக்கும், முதலீட்டாளர்களுக்குமே சிறந்தது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
Ford India : நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் மனநிலையை கணிக்கத் தவறிய ஃபோர்ட் நிறுவனம்.!