பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்... முழு விபரம் இதோ!
விற்பனை செய்வதற்கு வெளியில் அலைய வேண்டியதில்லை. அதற்கென, indiamart.com, pinterest.com, indiancurrencies.com, coinbazzar.com போன்ற வலைதளங்கள் இருக்கின்றன.
நவீனங்கள் வளர வளர பழைய பொருள்களுக்கு எப்போதும் மவுசு அதிகரிக்கும். குறிப்பாக பழைய நாணயங்களுக்கும், ரூபாய் நோட்டுகளுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
அவற்றை விற்கும்போது அதிர்ஷ்டம் இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம். விற்பனை செய்வதற்கு வெளியில் அலைய வேண்டியதில்லை. அதற்கென, indiamart.com, pinterest.com, indiancurrencies.com, coinbazzar.com போன்ற வலைதளங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் அரியதாக இருக்க வேண்டும்.
ஐந்து ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000 :
பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் எளிதாக ரூ.30,000 சம்பாதிக்கலாம். இருப்பினும், ரூ.5 ரூபாய் நோட்டில் சில தனித்தன்மைகள் உள்ளன. இந்த ஐந்து ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி 786 என்ற இலக்கங்கள் அதில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த நோட்டை Coinbazzar இணையதளத்தில் விற்கலாம்.
1 ரூபாய் நோட்டுக்கு ரூ. 45,000:
1957ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ஹெச். எம். படேல் கையெழுத்திட்ட 1 ரூபாய் நோட்டு இருந்தால் அதையும் Coinbazzar இணையதளத்தில் விற்கலாம்.
ஆளுநர் கையெழுத்து மட்டும் இல்லாமல் இதன் வரிசை எண் 123456 என்று அமைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை விற்பதன் மூலம் 45,000 ரூபாய்க்கு விற்கலாம்
10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000:
அசோக தூண் உருவம் பொறித்த பத்து ரூபாய் நோட்டு இருந்தால், அதன் மூலம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த 10 ரூபாய் நோட்டுகள் 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் சி.டி. தேஷ்முக் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Petrol Diesel Price: 15 நாளாக ஒரே விலை.. சென்னையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல்,டீசல் விலை!
Crytpo Currency in India: க்ரிப்டோ வர்த்தகத் தொழில்நுட்பத்தில் `பிளாக்செயின்’ என்றால் என்ன?