மேலும் அறிய

Crytpo Currency in India: க்ரிப்டோ வர்த்தகத் தொழில்நுட்பத்தில் `பிளாக்செயின்’ என்றால் என்ன?

க்ரிப்டோ கரன்சியைச் செயல்பட வைக்கும் தொழில்நுட்பம் `பிளாக்செயின்’ (Blockchain) என்று அழைக்கப்படுகிறது. இது டேட்டா பதிவுகளை மேற்கொண்டு, அதனை மாற்றவோ,நெட்வொர்க்கை ஏமாற்றவோ செய்வதைக் கடுமையானதாக்குகிறது.

க்ரிப்டோ கரன்சி குறித்த விவகாரங்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளன. பல்வேறு முதலீட்டாளர்களும் க்ரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் பெறும் முயற்சிகளைச் செய்து வரும் சூழலில், பலரும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பிட்காயின், ஈதெரியம், டாக் காயின் முதலான பல்வேறு க்ரிப்டோ கரன்சிகள் மைனிங் செய்தோ, விலை கொடுத்தோ, அந்த மதிப்புக்கு இணையான பொருள்களைக் கொடுத்தோ பெறக் கூடியவை. 

க்ரிப்டோ கரன்சிகளைச் செயல்படச் செய்யும் தொழில்நுட்பம் `பிளாக்செயின்’ (Blockchain) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் டேட்டா பதிவுகளை மேற்கொண்டு, அதனை மாற்றவோ, நெட்வொர்க்கை ஏமாற்றவோ செய்வதைக் கடுமையானதாக மாற்றுகிறது. அதே போல, இந்த டேட்டாவை அனைவரும் பார்க்கும்படியும், பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகக் காட்டப்படுகின்றன. 

பிளாக் செயின் என்றால் என்ன?

Crytpo Currency in India: க்ரிப்டோ வர்த்தகத் தொழில்நுட்பத்தில் `பிளாக்செயின்’ என்றால் என்ன?

பிளாக்செயின் என்பது பல்வேறு கணினிகளால் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்யும் டிஜிட்டல் பதிவேடு. இந்த இணைப்புச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளின் விவரங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை புதிதாகப் பணப் பரிவர்த்தனை நிகழும் போதும், இந்த இணைப்புச் சங்கிலியிலும், பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவரின் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படும்.  Distributed Ledger Technology என்ற தொழில்நுட்பத்தின் கீழ், பிளாக்செயின் தொழில்நுட்பம் வேலை செய்கிறது. இங்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் `ஹேஷ்’ என்று அழைக்கப்படும் க்ரிப்டோகிராபிக் கையெழுத்துடன் பதிவு செய்யப்படுகிறது. 

இந்தத் தொழில்நுட்பத்திற்கான மற்றொரு உதாரணம், கூகுள் டாக். கூகுள் டாக் பயன்படுத்தி, ஒரு ஆவணம் ஒரு குழுவினருடன் பகிரப்படும் போது, அது அவர்களின் கணினிக்கு மாற்றப்படாமல், பலராலும் பயன்படுத்த முடியும் என்றவாறு மாறுகிறது. ஒரே நேரத்தில் பலருக்கும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் அனுமதியை இந்தத் தொழில்நுட்பம் வழங்குகிறது. 

இது எப்படி வேலை செய்கிறது?

Crytpo Currency in India: க்ரிப்டோ வர்த்தகத் தொழில்நுட்பத்தில் `பிளாக்செயின்’ என்றால் என்ன?

ஒரு பிளாக்செயினில் மூன்று முக்கிய கருப்பொருள்கள் இருக்கின்றன. அவை பிளாக் (Block), நோட் (Node), மைனர் (Miner) என்று அழைக்கப்படுகின்றன. 

ஒரு பிளாக்செயினில் பல்வேறு பிளாக்கள் வைத்திருப்பதோடு, ஒவ்வொரு பிளாக்கிலும் டேட்டா பதிவேற்றப்பட்டிருக்கும். இந்த டேட்டாவில் பணப் பரிவர்த்தனைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தச் செயினை எந்த ஒரு தனி நபரோ, தனியார் நிறுவனமோ தங்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. 

இந்தச் செயினில் புதிய பிளாக்களை மைனிங் என்ற செயல்முறையின் மூலம் உருவாக்குபவர்கள் மைனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் கடினமாக கணக்குகளுக்கு விடை அளித்து அதன் மூலம் பிளாக்களில் டேட்டாவைச் சேகரிக்கச் செய்கின்றனர். ஒவ்வொரு பிளாக்கும் வெற்றிகரமாக மைனிங் செய்யப்பட்டவுடன், மைனர்களுக்குப் பணத் தொகை வழங்கப்படுகிறது.  

ஒவ்வொரு பிளாக்கும் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக செயின் உருவாகிறது. இந்த இணைப்புகளை நோட்கள் செய்கின்றன. மேலும் இந்த நோட்களால் மொத்த நெட்வொர்க்கும் இயங்குகிறது.

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget