Chennai Startup Disprz: டல்லாஸ் வென்ச்சர் கேபிடல் மூலம் 13 மில்லியன் நிதியை திரட்டும் சென்னை நிறுவனம்!
டல்லாஸ் வென்ச்சர் கேபிடல், மார்ஸ் க்ரோத் கேப்பிட்டல் தலைமையில் சென்னையை தலைமையாக கொண்ட ஸ்டார்ட்-அப் டிஸ்ப்ர்ஸ் $13-Mn நிதி திரட்டுகிறது.
![Chennai Startup Disprz: டல்லாஸ் வென்ச்சர் கேபிடல் மூலம் 13 மில்லியன் நிதியை திரட்டும் சென்னை நிறுவனம்! chennai based start up disprz raises 13 million funding led by dallas venture capital mars growth capital Chennai Startup Disprz: டல்லாஸ் வென்ச்சர் கேபிடல் மூலம் 13 மில்லியன் நிதியை திரட்டும் சென்னை நிறுவனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/648206a60ec6f84c8791fc77303f0979_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்கில்லிங் ஸ்டார்ட் அப் டிஸ்பார்ஸ், டல்லாஸ் வென்ச்சர் கேபிடல் மற்றும் மார்ஸ் க்ரோத் கேபிட்டல் தலைமையிலான தொடர் B நிதிச் சுற்றில் $13 மில்லியன் திரட்டியுள்ளது. இந்த நிதியானது அதன் தற்போதைய முதலீட்டாளர்களான Go1 (ஆஸ்திரேலிய யூனிகார்ன்), தாரா இந்தியா ஃபண்ட் IV, KOIS ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.ஆக்டஸ் கேபிடல் (யூரோகிட்ஸின் இணை நிறுவனர் விகாஸ் பட்னிஸின் குடும்ப அலுவலகம்) மற்றும் கே கேபிடல் (ஒரு முன்னணி விதை நிதியம்) ஆகியோரின் பங்கேற்பைக் தருகிறது.
கடந்த 2015 ம் ஆண்டு சுப்பிரமணியன் விஸ்வநாதன் மற்றும் குல்ஜித் சாதா ஆகியோரால் டிஸ்பார்ஸ் நிறுவப்பட்டது. டிஸ்பார்ஸ் என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் மற்றும் திறன் தளமாகும், இந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை சரியான திறன் கொண்டதாக செயல்படுகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 1.2 மில்லியன் பயனர்களை பெற்று சேவை செய்து வருகிறது.
தற்போது, சென்னையை தளமாகக் கொண்ட டிஸ்பார்ஸ் முதலீட்டை தயாரிக்கவும், பொறியியல் குழுக்களை ஆராயந்தும் வருகிறது. அதேபோல், இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவை நிறுவவும், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் அதன் தற்போதைய இருப்பை விரிவுபடுத்தவும் இருக்கிறது. மேலும், தொழில் சார்ந்த தயாரிப்பு முதலீடுகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை நிர்வாக அதிகாரிசுப்ரமணியன் விஸ்வநாதன் தெரிவிக்கையில், டல்லாஸ் வென்ச்சர் கேபிடல்யை டிஸ்பார்ஸ் இன் இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் வென்ச்சர் கேபிடல் வலுவான நெட்வொர்க்குடன் டிஸ்பார் இணைந்து செயல்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, டிஸ்பார்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி (COO) குல்ஜித் சாதா தெரிவிக்கையில், நாங்கள் ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கினோம், ஆனால் தற்போது பல தயாரிப்பு நிறுவனமாக உருவாகியுள்ளது. முக்கிய வணிகச் சிக்கல்களைத் தீர்க்கும் அதே வேளையில் தனித்துவமான சலுகைகள் மூலம் முன்னணி மற்றும் அறிவுப் பணியாளர்களின் திறன் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். நாங்கள் இனி ஒரு நல்ல கற்றல் தளமாக இருக்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய வணிகத் தளமாக செயல்படுவோம் என்று கூறினார்.
உலகளாவிய கற்றல் மற்றும் மேம்பாட்டுச் செலவு 2019 இல் $360 பில்லியனாக இருந்தது, கொரோனா தொற்றுநோய் இந்தச் செலவினம் காரணமாக வருகிற 2025 இல் $500 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பார்ஸ் தொடர்ந்து வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகியும், 2021 காலண்டர் ஆண்டு அதீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் $100 மில்லியனை அடையும் நோக்கத்தை ஸ்டார்ட்-அப் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)