மேலும் அறிய

அலர்ட்.. அலர்ட்.. தேதியெல்லாம் தள்ளி வச்சாச்சு.. முக்கிய தகவல்கள் இங்கே!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணத்தொகைக்கு வருமான வரிசெலுத்த தேவையில்லை என்பது போன்ற பல்வேறு மாற்றங்களை மக்களின் வசதிக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணத்தொகைக்கு வருமான வரிசெலுத்த தேவையில்லை என்பது போன்ற பல்வேறு மாற்றங்களை மக்களின் வசதிக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கொரோனா தொற்றின் 2 வது அலையின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நேரத்தில் சமானிய மக்களுக்கு உதவும் வகையில் வருமான வரிச் செலுத்துவதற்கான கால நீடிப்பு, வரி விலக்கு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைக்கொண்டு வந்துள்ளது. என்னென்ன மாற்றங்கள்? என்ன வகையில் மக்களுக்கு பயன்பெறுகிறது  என தெரிந்து கொள்வோம்.

  • அலர்ட்.. அலர்ட்.. தேதியெல்லாம் தள்ளி வச்சாச்சு.. முக்கிய தகவல்கள் இங்கே!

வருமான வரித்துறையின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆம் தேததியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் இணைக்கத் தவறினால் பான் கார்டு செயல்படாது எனவும் சரியான நேரத்தில் இணைக்கத் தவறும் பட்சத்தில்  ரூ .1,000 வரை அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினைக் கருத்தில் கொண்டு விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், வட்டி இல்லாமல் பணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கூடுதல் தொகையுடன் பணத்தினை செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குத் தேவையான பணத்தினை தங்களது நிறுவனத்தின் முதலாளிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறும் பட்சத்தில் அதற்கு வரிச் செலுத்த தேவையில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை எனவும், இதற்காக ரூ.10 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


அலர்ட்.. அலர்ட்.. தேதியெல்லாம் தள்ளி வச்சாச்சு.. முக்கிய தகவல்கள் இங்கே!

புதிய வீடு வாங்குபவர்களுக்கான வரிவிலக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான படிவம் எண் 64 D யில்  முதலீட்டு நிறுவனத்தால் அதன் பங்குதாரர்களுக்கு செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்பட்ட வருமான அறிக்கையை ஜூலை 15 அல்லது அதற்கு முன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தொடர்பான குறைதீர் திட்டத்தின் கீழ், செலுத்தப்பட வேண்டிய தொகைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம்  தேதி வரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட மதிப்பீட்டு உத்தரவை( assessment orde) நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

இதுப்போன்று கொரோனா காலக்கட்டத்தில் வருமான வரிச்செலுத்துவோரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது வருமான வரிச்செலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget