கொஞ்சம் டீ.. கொஞ்சம் காஃபி.. மெனுவில் புதிய அப்டேட் செய்த பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம்
காஃபிக்கு பேர்போன பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அவர்களின் மெனுவில் புதிதாக டீ மற்றும் ஃபில்டர் காஃபியை சேர்க்கவுள்ளனர்
பிரபல காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ்- க்கு தனியாக நுகர்வோர் கூட்டமே உள்ளது. காஃபி அனைத்து இடங்களில் கிடைத்தாலும் ஸ்டார்பக்ஸின் கஸ்டமர் சர்வீஸ்காகவே பலரும் இவர்களை நாடுகின்றனர். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவதற்கே சிலர் ஸ்டார்பக்ஸ்-ஐ நோக்கி படையெடுத்து செல்வதும் உண்டு. காஃபிக்கு பேர்போன ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அவர்களின் மெனுவில் புதிதாக டீ மற்றும் ஃபில்டர் காஃபியை சேர்க்கவுள்ளனர்.
View this post on Instagram
உலகளாவிய உணவு சங்கிலிகளில் ஒன்றாக இருக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அவர்களின் மெனுவில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர். முக்கியமாக இந்தியாவில், இந்தியர்களுக்கு ஏற்றவாறு ஸ்ட்ரீட் ஸ்டைல் சான்விட்ச், மில்சேக் போன்றவற்றை சேர்க்கவுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விலைகளும் சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. சர்வதேச நாடுகளில் உள்ள உலகளாவிய உணவு சங்கிலிகளான டாமினோஸ், பிட்சா ஹட் ஆகியவையும் இதுபோல்தான், ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றவாறு மெனுவிலும், உணவின் சுவையிலும் வேறுபாட்டை காணலாம்.
Starbucks came to India to change the coffee experience
— rajansibal (@sibalsahab) July 11, 2022
Few years later this is happening pic.twitter.com/DY41nDnccN
இந்த மெனு மாற்றம் முதல் கட்டமாக பெங்களூரு, குர்கோன், போபால் மற்றும் இந்தோர் ஆகிய நான்கு நகரங்களில் மட்டும் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. டாட்டா ஸ்டார்பக்ஸின் CEO சுஷாந்த் தாஷ் கூறியதாவது, “சில உணவுகளை ஸ்டார்பக்ஸ் மெனுவில் நாங்கள் சேர்த்துள்ளோம். இவை அனைத்தும் ஒரு பரிசோதனை முயற்சியாகும்.எங்கள் நிறுவனத்தின் நுகர்வோர் கூட்டத்தை விரிவு படுத்த நாங்கள் சில உணவுகளின் விலையையும் குறைத்துள்ளோம். முக்கியமாக மெனு மாற்றத்தின் நொக்கம் சந்தை முழுவதும் உள்ள நுகர்வோரின் விருப்பத்தை கவனிக்கவே ஆகும். இதை பொருத்து எதிர்காலத்தில் மாற்றங்கள் தொடரும்.”
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அவர்களை விட விலை குறைவாக உணவு பொருட்களை விற்கும் காஃபி நிறுவனங்களான கஃபே காபி டே , மற்றும் மெக் கஃபே- விற்கும் உலகளவில் பெரிய போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.