Share Market Update: ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை.. லாபத்தில் இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி...
Share Market : இன்றைய நாள் முடிவில் இந்திய பங்குச் சந்தையானது, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
Share Market : இன்றைய நாள் முடிவில் இந்திய பங்குச் சந்தையானது, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 274.12 புள்ளிகள் அதிகரித்து 61,418.96 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 84.25 புள்ளிகள் அதிகரித்து 18,244.20 புள்ளிகள் வர்த்தகமாகின.
Sensex climbs 274.12 points to settle at 61,418.96; Nifty gains 84.25 points to 18,244.20
— Press Trust of India (@PTI_News) November 22, 2022
லாபம் - நஷ்டம்
என்டிபிசி, எச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டெட்டன் கம்பெணி, அதானி போர்ட்ஸ், யுபிஎல், அப்போலோ மருத்துவமனை, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், பிரிட்டானியா, லார்சன், டாடா ஸ்டீல், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஐசிஐசி வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
பிபிசிஎல், நெஸ்டல், பாரதி ஏர்டெல், கோடக் மகேந்திரா, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, சிப்ளா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
பணவீக்கத்தின் தாக்கம்:
கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகளில் சமீபத்திய வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இந்நிலையில், நுகர்வோர் விலையின் பணவீக்கம் மிதமாக காணப்படுகிறது.
இதனால், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் எழுச்சியைத் தொடரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய முடிவில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு:
சீனாவில் நிலவி வரும் கொரோனா தாக்கத்தால், அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை குறைந்து காணப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.
Rupee gains 12 paise to close at 81.67 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) November 22, 2022
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 12 காசுகள் அதிகரித்து 81.67 ரூபாயாக ஆக உள்ளது.