Share Market : சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...100 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...!
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையில் சரிவில் தொடங்கியுள்ளது
![Share Market : சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...100 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...! Share Market opened Today april 6 Share Market Update Sensex Nifty Points Share Market : சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...100 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/33c4a3a08dd2692d9bef2123af584adc1680753447872571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 117.59 அல்லது 0.20% புள்ளிகள் குறைந்து 59,572.59 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 32.15 அல்லது 0.18% புள்ளிகள் குறைந்து 17,524.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதுமே இந்திய பங்குச்சந்தையானது மந்தமாகவே காணப்பட்டது. அதன்படி இன்றைய வர்த்தக தொடக்கத்திலும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி அதன் இருமாத நாணய கொள்கைக் கூட்டத்தின் முடிவுகளை இன்று அறிவிக்க இருக்கும் நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
லார்சன், பிபிசிஎல், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், எம்எம், சிப்ளா, பஜாஜ் பின்சர்வ், சன் பார்மா, கிராசிம், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
கோடக் மகேந்திரா, நெஸ்டீலே, யுபிஎல், டெக் மகேந்திரா, கோல் இந்தியா, ஹிரோ மோட்டோகோர்ப், எச்டிஎஃப்சி லைஃப், இன்போசிஸ், ஐடிசி, அப்போலா மருத்துவமனை, டைட்டன் கம்பெணி, ஆக்சிஸ் வங்கி, ஹின்டல்கோ, மாருதி சுசிகி, டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)