53 ஆயிரத்தை கடந்த சென்செக்ஸ் புள்ளிகள்
பங்குச்சந்தை இன்று மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 53 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் இறுதி முதலே நாட்டில் பல்வேறு தொழில்களும் முடங்கின. இதனால், பங்குச்சந்தையும் ஏற்ற, இறக்கங்களுடன் மாறி, மாறி காணப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரவல் ஓரளவு குறைந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு மாநிலங்களும் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.
இந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. இந்த நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.76 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 891.76 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 0.051 சதவீதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.90 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 853.25 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவீதம் உயர்வாகும். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் 3.29 சதவீதமும், எச்.டி.எப்.சி. வங்கி 1.25 சதவீதமும், டைட்டை கம்பெனி 1.07 சதவீதம் பங்குகளும் உயர்ந்து காணப்பட்டது.
மதியம் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 156.09 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 36.09 புள்ளிகள் வர்த்தகம் நடைபெற்றது. நிப்டியும் 56.85 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 891.20 புள்ளிகள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முழுவதும் வீழ்ச்சியில் இருந்த பங்குச்சந்தை இந்த வாரம் ஏறுமுகத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.