Sensex Record High: 65,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் சென்செக்ஸ்; வரலாறு காணாத அளவு உயர்வு!
Sensex Record High: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 341.48 அல்லது 0.53 % புள்ளிகள் அதிகரித்து 65,057.05 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 106.45 அல்லது 0.46% புள்ளிகள் உயர்ந்து 19,276.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
பி.பி.சி.எல்., ஹெச்.டி.எஃப்.சி., டிவிஸ் லேப்ஸ், அல்டாடெக் சிமெண்ட், க்ரேசியம், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிப்ளா. ஹிண்டால்கோ, என்.டி.பி.சி., ரிலையன்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், ஐ.டி.சி., ஈச்சர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ், பஜார் ஃபின்சர்வ், விப்ரோ, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
பவர்கிரிட் கார்ப், பஜார்ஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்கார்ப், மாருதி சுசூகி, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பிரிட்டானியா, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, கோடாக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், லார்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.
வரலாற்றில் முதல் முறையாக 65 ஆயிரத்தை கடந்த சென்செக்ஸ்:
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 65,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.