SBI ATM New Rules : பணம் எடுப்பதற்கு புதிய விதியை அறிவித்த எஸ்பிஐ - முழு விவரம்!
எந்த ஒரு ஏடிஎம்.மிலும் வாடிக்கையாளர் அணுகி கட்டணமின்றிப் பயன்படுத்திட வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக தெரிவித்தது.
![SBI ATM New Rules : பணம் எடுப்பதற்கு புதிய விதியை அறிவித்த எஸ்பிஐ - முழு விவரம்! SBI ATM Cash Withdrawal New Rules Full Details Here SBI ATM New Rules : பணம் எடுப்பதற்கு புதிய விதியை அறிவித்த எஸ்பிஐ - முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/30/0b7456d3b895c4c6f52172e85e23761c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது சேவைக் கட்டண விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் முதல், அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 4 முறைக்கு மேலாக எஸ்பிஐ வங்கிக் கிளையில் (அ) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முறைக்கு மேல், ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாயும்,ஜிஎஸ்டி சேவை வரியும் வசூலிக்கப்படும். மேலும், ஒரு வாடிக்கையாளர் வேறொரு வங்கியின் ஏடிஎம்(ATM)ஐ பயன்படுத்தினால் அந்த ஒரு ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்படும்.
காசோலை புத்தக வசதி தொடர்பான சேவைக் கட்டணங்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு முதல் 10 காசோலை புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அதன்பின், கேட்டுப்பெறும் 10 செக் புத்தக வசதிகளுக்கு 40 ரூபாயும் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் ; 25 செக் புத்தக வசதிகளுக்கு 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும், அவசரகால செக் புத்தக வசதிகளுக்கு 50 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.
மேலும், அந்தந்த எஸ்பிஐ ஏடிஎம்-ல் பண பரிவர்த்தனை தவிர எந்த சேவையை பயன்படுத்தினாலும், மற்ற வங்கி ஏடிஎம்களில் இருப்பு நிலை பற்றிக்கேட்கும் பொழுது கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது.
1 மாதத்தில் 4 முறைக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படும் ~ எஸ்.பி.ஐ
— ⭐மித்ரன்⭐ (@sultan_Twitz) June 26, 2021
இனிமே உன் பேங்குல அக்கவுண்ட் வச்சிருந்தா தான காசை புடுங்குவ..?! pic.twitter.com/PV47EHYhs5
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்கின்றனர். எந்த ஒரு ஏடிஎம்.மிலும் வாடிக்கையாளர் அணுகி கட்டணமின்றிப் பயன்படுத்திட வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக தெரிவித்தது. மேலும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு மிகாமல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
எஸ்பிஐயின் ஏடிஎம் கட்டணம் அறிவிப்புக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஏடிஎம் கட்டண அறிவிப்புகளை வங்கி நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிட்காயின் வாங்க SBI , HDFC வங்கி சேவையை பயன்படுத்துவரா? உங்களுக்கே இந்த எச்சரிக்கை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)