SBI New Rules: வங்கியில் பணம் எடுப்பதற்கு எஸ்.பி.ஐ வகுத்துள்ள புதிய மாற்றங்கள் என்ன?

மூன்றாம் தரப்பினர் வங்கி காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் , கண்டிப்பாக KYC யினை வங்கியிடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது

FOLLOW US: 

பெரும்பாலான மக்கள் வங்கி சேமிப்புக் கணக்கினை தங்களுக்கு வசதியுள்ள அல்லது சொந்த ஊரில் உள்ள கிளையில் தொடங்குவார்கள். ஆனால் வேலை போன்ற பல்வேறு பணிகளுக்காக பலர் வெளியுர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல நேரிடும். தற்போடு ஏடிஎம் போன்றவற்றில் பணம் எடுக்கும் வசதிகள் இருந்தாலும் குறைந்த மதிப்பிலான பணத்தினை மட்டும்தான் எடுக்க முடியும். ஒரு வேளை இதுப்போன்ற வசதிகள் இல்லாதவர்கள் தங்களது வங்கிக் கிளை இல்லாமல் வேறொரு கிளையில் பணம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கான கட்டணம் மற்றும் குறைந்த மதிப்பிலான பணம் மட்டும்தான் எடுக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது.

 எனவே கொரோனா தொற்றின் 2 வது அலை மக்களை பாடாய்படுத்தி வரும் சூழலில் தங்களிள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாய் எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி காசோலை மற்றும்  திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non – home cash திரும்பப்பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது. அதன்படி, உங்கள் சொந்த கணக்கில் பணம் எடுக்கிறீர்கள்? என்றால் பாஸ்புக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் வரை பணத்தினை எடுத்துக்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதோடு நீங்கள் உங்கள் பணத்தினை உங்களது கிளை இல்லாமல் வேறொரு கிளையில் பணம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்புக் உடன் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வது நபர் withdrawal form மூலம் பணம் அனுப்ப முடியாது என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

இதோடு, காசோலையினை பயன்படுத்தி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் எனவும்,  மூன்றாம் தரப்பினர் காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார் என்றால் பணத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணம் எடுப்பவர்களுக்கு KYC கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் உங்கள் காசோலையினைக்கொடுத்து நீங்கள் உங்கள் கணக்கில் பணம் எடுப்பதற்கு ஒருவரை அனுப்பினால், உரிய பணத்தினை ஒப்படைப்பதற்கு முன்னதாக கே.ஓய்.சி கேட்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக தங்களுடைய பணத்தினை எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது  எஸ்.பி.ஐ வங்கியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வரம்புகள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே மக்களின் வசதிக்காக நடைமுறையில் இருக்கும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: SBI new announcement withdraw process bank customer

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!