Ukraine Russia Tensions: தொடங்கியது போர்.. கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எகிறப்போகும் பெட்ரோல் விலை!?
ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
![Ukraine Russia Tensions: தொடங்கியது போர்.. கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எகிறப்போகும் பெட்ரோல் விலை!? Russia Ukraine war Crude Oil price hike Ukraine Russia Tensions: தொடங்கியது போர்.. கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எகிறப்போகும் பெட்ரோல் விலை!?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/2bbb27f0c0afe2f08c6ce6da78a08f5a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஷ்யா உக்ரைன் போன் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர் உயர்ந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலின் விலை 100 டாலராக உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை 2014 ஆம் ஆண்டிற்கு பின், 8 ஆண்டுகளுக்கு பிறகு 100 டாலராக உயர்வு. இதனையெடுத்து பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோல் டீசல் தேவையை நிவர்த்தி செய்யும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 85% கச்சா எண்ணெய் இறக்குமதியையே சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகிவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், இதனால் உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் உயரும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிறகு, பெட்ரோல் டீசல் விலையில் பெரிதளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், பெயிண்ட், டயர்கள், பிளாஸ்டிக், ஆகிய பொறியியல் சார்ந்த தயாரிப்பு துறையில் பெரும் விலை உயர்வை ஏற்படுத்தும். விமானம், ரயில், பேருந்து போன்றவைகளின் போக்குவரத்து கட்டணம் உயரும். இதனால் சமையல் கேஸ் விலை, உலோகங்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டின் விலைவாசி மற்றும் உணவு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் குறைந்தால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)