Mukesh Ambani Salary: ஜீரோ ஆனது முகேஷ் அம்பானியின் சம்பளம்! காரணம் இது தான்!
கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில், முகேஷ் அம்பானி தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை இந்த கொரோனா அவரின் சம்பளத்தை ஜீரோ ஆக்கியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. இவர், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து சம்பளமாக எந்த தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை. வணிகங்களையும், பொருளாதாரத்தையும் கொரோனா மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதை தொடர்ந்து, அவரே முன்வந்து, தனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று அறிவித்துவிட்டார். கடந்த நிதியாண்டுக்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் முகேஷ் அம்பானிக்கான சம்பளம் எனும் பகுதியில் ஜீரோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் முகேஷ் அம்பானி சம்பளமாக ரூ.15 கோடி பெற்றுள்ளார். தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர் இதே தொகையைதான் சம்பளமாக பெற்று வந்துள்ளார். சம்பளத்தை அதிகரித்து கொள்ளவில்லை. அம்பானி சம்பளம் வாங்காத நிலையில் அவரது உறவினர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டனர். உறவினர்கள் நிகில் மெஸ்வானி, ஹிடால் மெஸ்வானி தலா ரூ.24 கோடி சம்பளமும், நிறுவனத்தின் செயலாக்க இயக்குநர்கள் பிரசாத் ரூ.11.99 கோடி, பவன் குமார் ரூ.11.15 கோடி சம்பளமாக பெற்றனர்.
மேலும், கடந்த நிதியாண்டில் அம்பானியின் மனைவி நிடா அம்பானி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டணமாக 8 லட்ச ரூபாயும், ஆண்டு கமிஷன் தொகையாக ரூ.1.65 கோடியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ப்ரேட் வரியை ஓவர்டேக் செய்த வருமான வரி; பல ஆண்டுகளுக்கு பின் இது எப்படி நடந்தது?
கொரோனா தொற்றால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்களின் ஊழியர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கைவிடவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளார்களுக்கு பல சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்திற்கு உதவி. பணியாளர் கடைசியாக பெற்ற சம்பளம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். குழந்தைகளுக்கான கல்விச் செலவை ரிலையன்ஸ் குழுமம் ஏற்கும். இளநிலை படிப்பை முடிக்கும் வரை கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் செலுத்தப்படும். மறைந்த பணியாளரின் மனைவி, பெற்றோரின் முழு மருத்துவ செலவும் ஏற்கப்படும். பணியாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் கொரோனா கால சிறப்பு விடுமுறை வழங்கப்படும். நேரடியாக சம்பளம் பெறாத பணியாளர்கள் மரணித்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
நாட்டில் கொரோனா முதல் அலையில் இரண்டாவது அலை வரை பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சிறு தொழில் முதல் பெரும் நிறுவனங்கள் வரை கொரோனா அலையில் சிக்கி சின்னபின்னமாகியுள்ளது. இருப்பினும், கார்பரேட் நிறுவனங்கள் கொரோனா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு சலுகை அறிவித்த முகேஷ் அம்பானி, தனி ஊதியத்தை பெறாதது குறிப்பிடத்தக்கது.
''எங்களது 60% தயாரிப்புகள் ஆரோக்கியமானதல்ல'' - நெஸ்லே அறிக்கையால் அதிர்ச்சி!