மேலும் அறிய

Visa Card: விசா, மாஸ்டர்கார்டு - வணிக ரீதியிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நிறுத்திவைக்க ஆர்.பி.ஐ. உத்தரவு!

Visa Card: விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்களின் டெபிட், கிரெடிடி கார்டுகள் கொண்டு வணிக ரீதியிலான (commercial payments) பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டாம் என ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

'விசா’,’மாஸ்டர்கார்டு’ கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி (Reserve Bank of India's (RBI)) அறிவுறுத்தியுள்ளது. 

ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீக காலமாக நிறைய விதிமுறைகளை விதித்து வருகிறது. பே.டி.எம். நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை சரியாக பின்பற்றதாக காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. 

Business payment solution providers (BPSP) பயன்படுத்தி கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட சிறு நிறுவனங்கள்  விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் கொண்டு வணிக ரீதியிலான (commercial payments) பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டாம் என ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான காரணம் ரிசர்வ் வங்கி தரப்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும், விசா மாஸ்டர்கார்ட் டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளின் KYC  விவரம் சரியாக தரப்படுவதில்லை என்பதல் ஆர்.பி.ஐ,. இந்த முடிவை எடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Paymate, Endcash,Fintech உள்ளிட்ட நிறுவனங்கள் பேமென்ட் சொல்யூசன் ப்ரோவைடர்களாக இருக்கிறார்கள். 

வணிக கார்டு வகைகள் 

நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களுக்கு வணிக கார்டுகள் வழங்கப்படுகிறது. அலுவல ரீதியிலாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் உள்ளிட்ட இன்ன பிற செலவுகளை மேற்கொள்ள கிரெடிட் கார்டு வழங்கப்படும். (பணியாளார்கள் சொந்த பணத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக..) பிற வணிக காரணங்களுக்காகவும் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிரது. 

கடந்த 2017-ம் ஆண்டு BPSP தொடங்கப்பட்டது. முன்னதாக கார்ப்ரேட் நிறுவனங்கள் பண பரிவர்த்தனைக்கு RTGS, NEFT முறையை பயன்படுத்தியது. இதெல்லாம் டெபிட் பரிவர்த்தனை. BPSP-ன் வருகைக்கு பிறகு கிரெடிட் பரிவர்த்தனைகளையும் அனுமதித்தது. EnKash,Paymate உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் மூலம் மாதத்திற்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நிகழும் என்று நம்பப்படுகிறது. மேலும் இதனால் கார்டு முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’RBI PA & PG Audit’-ன் சட்ட விதிகளின் படி, BPSP உரிமம் வழங்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. வங்கியில் உள்ள கரன்ட் கணக்குகள் அதன் பயனாளர்கள்; வங்கி வழங்கிய கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பர்ரிவர்த்தைகளுக்கு அவர்களிடமே கே.ஒய்.சி. விவரம் இருக்கும். பேமன்ட் ப்ரோவைடரிடம் அது இருக்காது என்பதும் ஆர்.பி.ஐ. அறிந்ததே, இருப்பினும் இப்படியான அறிவிப்பை வெளியிட்டிருப்பது பற்றிய புரிந்து கொள்ள முடியவில்லை என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ரிசர்வ் வங்கி வணிக ரீதியிலான பணபரிவத்தனை மேற்கொள்ளப்படும்போது அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது; யாருக்கு பணம் செல்கிறது; என்பது குறித்த விவரங்களில் தெளிவை எதிர்பார்க்கிறது என்பது புரிகிறது. இது தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று  கார்டு நெட்வோர் துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை இப்படியான செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
Embed widget