மேலும் அறிய

Post Office Savings Schemes: தமிழ்நாட்டில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்னென்ன? விரிவான தகவல்கள் இதோ!

Post Office Savings Scheme: போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். அப்படி, மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, கொஞ்சம் நிதி சேமிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ண இருப்பவர்களாக இருந்தால்,அவர்களுக்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் தபால் துறையில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு (Post Office Savings Account)

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம். குறைந்தபட்சம் 10 வயதுடைய மைனர் எனில் அவர்களுக்கு பாதுகாவலர் இருக்க வேண்டும். பாதுகாவலர் மட்டுமே அதை நிர்வகிக்க முடியும். ​​இந்தக் கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மற்றும் கடைசி நாளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். இந்தக் காலக்கட்டத்தில், மீதித் தொகை ரூ.500க்குக் குறைவாக இருந்தால், வட்டி எதுவும் வரவு வைக்கப்படாது என்று தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், கணக்கு இருப்பு குறைந்தபட்சம் ரூ. 500 ஆக இருக்க வேண்டும், இல்லையென்றால் கணக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 50 எடுக்கப்படும். கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக மாறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

அமைதியான கணக்கு:  ஒரு சேமிப்பு கணக்கில் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது அமைதியாக/செயலற்றதாகக் கருதப்படும். சேமிப்பு கணக்கை மீண்டும் திறக்க,(KYC) ஆவணங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் ஆகியவற்றுடன் ஒருவர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கில் காசோலை புத்தகம், ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கின்றன.

நேர வைப்பு திட்டம் (Post Office Time Deposit Account (TD))
 
அஞ்சலகத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பாக்க விரும்பினால், நேர வைப்புத் திட்டத்தின் விருப்பம் இதற்கு நல்லது. முதல் ஆண்டு 6.8% -மும் இரண்டாம் ஆண்டு நேர வைப்புகளுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இது தவிர, 5 வருட கால வைப்புத்தொகைக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும், இதில் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் 8 மாதங்களில் இரட்டிப்பாகும்.

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) ஏன் அவசியம். அதன் பலன் என்ன? எப்படி இத்திட்டத்தில் இணையலாம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS)  என்றால் என்ன?

போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) என்பது நிதியமைச்சகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புத் திட்டம்.  இதில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை தனியாகவும், ரூ.15 லட்சம் வரை கூட்டாகவும் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம்.  இத்திட்டத்தின் கீழான சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4.5 லட்சம் தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,475 வட்டியாகக் கிடைக்கும்.

18 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். உங்கள் மைனர் வாரிசின் பெயரிலும் ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை 18 வயது பூர்த்தியான பின்னரே பெற முடியும். ஓராண்டுக்கு முன்னரே பணத்தை எடுத்தால் எந்த பலனும் இருக்காது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் எடுத்தால் செலுத்திய தொகையில் 2% அபராதமாகப் பிடிக்கப்படும். 3 முதல் 5 ஆண்டுகளில் திரும்பப் பெற்றால் மொத்த பணத்தில் 1% அபராதம் பிடிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS))
 
அஞ்சலகத்தின் இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 8.2% சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதன் கீழ், உங்கள் பணம் சுமார் 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகிறது. அஞ்சலக சேமிப்புகளில் அதிக வட்டியுடைய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. 30 லட்சம் வரை இந்த திட்டத்தில் அதிகபட்ச சேமிப்பு தொகையாகும்.

பொது வருங்கால வைப்பு நிதி (15-year Public Provident Fund Account (PPF))
 
PPF இல், 7.1 சதவீத வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும், இதன் கீழ் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் ஒரு மாதத்தில் இரட்டிப்பாகும். இதற்கு வரி விலக்கும் உண்டென்பதால் கூடுதல் சிறப்புடைய சிறுசேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (National Savings Certificates (NSC))
 
இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் 7.7 சதவிகிதத்தில் கிடைக்கும், இதில் முதலீடு செய்த 5 மாதங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களுக்கு பணம் இரட்டிப்பாகும். கையிலிருக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய ஏற்றதாக இந்த திட்டம் இருக்கும். இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் | Kisan Vikas Patra Scheme
 
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுதோறும் 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இந்த தபால் அலுவலக திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், உங்கள் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம்.

Post Office Savings Schemes: தமிழ்நாட்டில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்னென்ன? விரிவான தகவல்கள் இதோ!

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Accounts)

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் 8 சதவீதம் ஆகும். இதில் குறைந்தபட்சம் தொகையாக ரூ.250 கணக்கை தொடங்கலாம்.  சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் அதற்கு உரிமையாளராவார். இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம். 

SSY கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் தொடங்கலாம். மேலும் அதனைப் பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.

டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், ரூ.50-இன் மடங்குகளில். ஒரு மொத்த தொகை அல்லது ஒரு மாத அடிப்படையில் செலுத்தலாம். இருப்பினும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், மேலும் கணக்கு தவறியதாக கருதப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ. 250 + ரூ. 50 செலுத்துவதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள், அவ்வாறு தவறிய கணக்கை புதுப்பிக்க முடியும்.

‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)

ஆண் குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டம்தான்  ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)ஆகும். பெண் குழந்தைகளுக்கான  ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ போலவே வருடம் ஒன்றுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையங்களிலும் இதனை தொடங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குழந்தைகளின் வயது 10க்கு மேல் இருந்தால், அவர்களின் பெயரிலேயே திட்டத்தை தொடங்கிக்கொள்ளலாம். அதேசமயம் குழந்தைக்கு 10 வயதுக்கு கீழ் இருந்தால் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம். 

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

மேலும் வாசிக்க..

Post Office : இனிமே உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு அக்கவுண்ட்டுக்கு ஈஸியா பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்.. இதோ அப்டேட்

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
Embed widget