Post Office : இனிமே உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு அக்கவுண்ட்டுக்கு ஈஸியா பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்.. இதோ அப்டேட்
பணம் அனுப்புதல், QR குறியீட்டை ஸ்கேன் செய்தல் மற்றும் சேவைகள் மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளையும் இது எளிதாக்குகிறது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு (IPPB) கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது, சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA), தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற அடிப்படை செயல்பாடுகளை தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் செய்துகொள்ள முடியும். இந்தத் திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான பிரீமியங்களை IPPB மொபைல் ஆப் மூலம் மேற்கொள்ளலாம்.
‘DakPay’ டிஜிட்டல் கட்டண செயலி
IPPB மூலம் அக்கவுண்ட் வைத்திருப்பவர் தங்கள் வங்கி பேலன்ஸ் தொகையை எளிதாக அறிந்துகொள்ளவும், பணத்தை மாற்றவும், மற்றும் IPPB மூலம் பிற நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை செய்ய முன்பு தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். தற்போது இவற்றை ஆன்லைன் மூலமாகவே நொடியில் செய்துவிட முடியும். இந்தத் திட்டங்களின் அக்கவுண்ட்டை நிர்வகிக்க, IPPB கணக்கு அல்லது மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே செய்யலாம். தபால் அலுவலகம் மற்றும் IPPB வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் ‘DakPay’ டிஜிட்டல் கட்டண செயலியை அரசாங்கம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்திய அஞ்சல் மற்றும் IPPB வழங்கும் டிஜிட்டல் நிதி மற்றும் உதவி வங்கி சேவைகளை DakPay ஆப் வழங்குகிறது. பணம் அனுப்புதல், QR குறியீட்டை ஸ்கேன் செய்தல் மற்றும் சேவைகள் மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளையும் இது எளிதாக்குகிறது.
IPPB மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி?
- உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் IPPB கணக்கில் பணத்தைச் சேர்க்கவும்.
- DOP சேவைகளுக்குச் செல்லவும்.
- அங்கிருந்து நீங்கள் உங்களுக்கு வேண்டிய சேவையை தேர்வு செய்யலாம் - தொடர் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு, தொடர் வைப்புத்தொகைக்கு எதிரான கடன் ஆகியவை அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
IPPB மூலம் சுகன்யா சம்ரித்தி கணக்கிற்கு நிதியை மாற்றுவது எப்படி:
- உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தைச் சேர்க்கவும்.
- DOP க்கு செல்லவும். சுகன்யா சம்ரிதி கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் SSY கணக்கு எண்ணை உள்ளிடவும், பின்னர் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.
- தவணை காலம் மற்றும் தொகையை தேர்வு செய்யவும்.
- IPPB மொபைல் அப்ளிகேஷன் மூலம் வெற்றிகரமாகப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது என IPPB தெரிவிக்கும்.
PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய:
- உங்கள் PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், வருங்கால வைப்பு நிதியைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் PPF கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.
- டெபாசிட் செய்ய வேண்டிய தொகையைக் குறிப்பிட்டு, 'Pay' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- IPPB மொபைல் அப்ளிகேஷன் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று ஆப் உங்களுக்குத் தெரிவிக்கும்.
- இந்த ஆப் மூலம் இந்தியா போஸ்ட் வழங்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக முதலீட்டு விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். IPPB அடிப்படை சேமிப்புக் கணக்கு மூலம் வழக்கமான முறையில் பணம் செலுத்தலாம்.
- இந்த ஆப்பை பயன்படுத்தி மற்ற வங்கிக் கணக்குகளிலிருந்து IPPBக்கு நிதியை மாற்றலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்