மேலும் அறிய

New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி

New PPF Rules: மத்திய அரசின் கீழ் செயல்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கான, 3 புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

New PPF Rules: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தகவல்கள அப்டேட் செய்யாதவர்களுக்கு, இனி வட்டித்தொகை கிடைக்காது.

பொது வருங்கால வைப்பு நிதி:

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) சிறந்த எதிர்காலத்திற்காக, முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மக்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு தயாராகத் தொடங்குகிறார்கள். சமீபத்தில் பிபிஎஃப் கணக்கு தொடர்பான சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதல்கள், சிறார்களின் பெயரில் தபால் நிலையங்களால் திறக்கப்படும் பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் தேசிய சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் என்ஆர்ஐகளுக்கான பிபிஎஃப் கணக்குகளை விரிவுபடுத்துவது தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.

பிபிஎஃப் கணக்கு தொடர்பான 3 விதிகளில் மாற்றம்:

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, பிபிஎஃப் கணக்கு தொடர்பான 3 விதிகளை மாற்றியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஆகஸ்ட் 21, 2024 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.. சுற்றறிக்கையின்படி, முறையற்ற சிறுசேமிப்புக் கணக்குகளை முறைப்படுத்த நிதி அமைச்சகத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே இது தொடர்பான அனைத்து விடயங்களும் நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது முதல் மாற்றமாகும்.

கூடுதல் வட்டி ரத்து:

மைனர்களுக்கு (18 வயது நிரம்பாத) அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு இணையான வட்டி கிடைக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற முறையற்ற கணக்குகளுக்கு, மைனர் 18 வயதை அடையும் வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு சமமாக வட்டி செலுத்தப்படும். இதற்குப் பிறகு அவருக்கு முழு வட்டி விகிதம் வழங்கப்படும். அத்தகைய கணக்கின் முதிர்வு மைனர் 18 வயதை எட்டிய தேதியிலிருந்து கணக்கிடப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்:

முதன்மைக் கணக்கானது ஆண்டு முதலீட்டு வரம்பான ரூ. 1.5 லட்சத்திற்குள் இருக்கும் வரை திட்ட விகிதத்தில் தொடர்ந்து வட்டி வருவாயைப் பெறும். ஒன்ன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருக்கும்போது, எல்லா கணக்குகளிலும் உள்ள மொத்த இருப்பு இந்த வரம்பிற்குக் கீழே இருந்தால், இரண்டாம் நிலைக் கணக்குகளில் உள்ள மொத்த தொகையும் முதன்மைக் கணக்கிற்கு மாற்றப்படும். அதேநேரம், ஆண்டு முதலீட்டு வரம்பை தாண்டிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலையை தாண்டிய எந்தவொரு கணக்கிற்கும் எந்த கூடுதல் வட்டியும் கிடைக்காது. இந்த மாற்றம் முதலீட்டாளர்கள் தங்கள் முதன்மை முதலீடுகளில் இருந்து இன்னும் பயனடைய முடியும் என்பதை உறுதி செய்யும் அதே வேளையில் அதிகப்படியான கணக்கு வைத்திருப்பதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது

என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்கில் வட்டி சேராது:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வைத்திருக்கும் பிபிஎஃப் கணக்குகளை, முதிர்வு வரை அவர்கள் பராமரிக்கலாம். இருப்பினும், அவர்களுக்கு செப்டம்பர் 30, 2024 வரை மட்டுமே POSA வட்டி வழங்கப்படும். அக்டோபர் 1ம் தேதி முதல், இந்தக் கணக்குகள் படிவம் H இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வசிப்பிட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் எந்த வட்டியையும் பெறாது. PPF கணக்குகள் செயலில் இருக்கும் போது NRI களாக மாறிய இந்திய குடிமக்களை புதிய வழிகாட்டுதல்கள் முதன்மையாக பாதிக்கிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget