மே மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? இதோ பட்டியல் உங்களுக்காக!
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என எதையும் எடுத்துக்கொண்டாலும் அனைத்துப்பலன்களையும் நாம் டிஜிட்டல் வாயிலாக பெற முடியாது. சில தேவைகளுக்கு நாம் வங்கிகளுக்குத் தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
தேசிய விடுமுறை மற்றும் மாநிலத்தின் தனிப்பட்ட விடுமுறை போன்ற காரணங்களினால் இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வருகின்ற மே மாதத்தில் தொடர்ந்து 10 நாள்கள் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை அதற்கேற்றால் போல் தயார்படுத்திக்கொள்கின்றனர். என்னதான் இந்தியாவில் அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் சூழலில், சில விஷயங்களுக்கு நாம் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு தான் செல்ல நேரிடும். அதில் முக்கியமான ஒன்று தான் வங்கி சேவை. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என எதையும் எடுத்துக்கொண்டாலும் அனைத்துப்பலன்களையும் நாம் டிஜிட்டல் வாயிலாக பெற முடியாது. சில தேவைகளுக்கு நாம் வங்கிகளுக்குத் தான் செல்ல வேண்டும்.
இதற்காக நாம் பணிகளுக்கு விடுமுறை எடுத்து வங்கிகளுக்கு சென்று பார்த்தால் அங்கேயும் சில நாள்கள் விடுமுறையாக ப் போய்விடும். இதுப்போன்ற பிரச்சனைகளில் இனி நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் முன்னதாக வங்கிகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை? என்னென்ன தேதிகள்? என நாம் அறிந்துக்கொள்வது இன்றைக்கு அவசியமாகிவிட்டது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, மே மாத தொடக்கத்தில் வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் எனவும் ஆனால் அனைத்து மாநிலத்திலும் 4 நாள் தொடர் விடுமுறை இல்லை, சில மாநிலங்களில் மட்டுமே இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இதோ மே மாதத்தில் வங்கிகளின் விடுமுறை பட்டியல் உங்களுக்காக….
மே 1 (ஞாயிறு):
மே தினம் - நாடு முழுவதும் விடுமுறை / மகாராஷ்டிரா தினம் - மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை
மே 2 (திங்கட்கிழமை): மகரிஷி பரசுராம் ஜெயந்தி - பல மாநிலங்கள் விடுமுறை
மே 3 (செவ்வாய்க்கிழமை): இதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)
மே 4 (புதன்கிழமை): இதுல் பித்ர் - தெலுங்கானா மாநிலத்தில் விடுமுறை
மே 9 (திங்கட்கிழமை): குரு ரவீந்திரநாத் ஜெயந்தி - மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் விடுமுறை
மே 13 (வியாழன்): இதுல் பித்ர் - தேசிய விடுமுறை
மே 14 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
மே 16 (திங்கட்கிழமை): மாநில தினம், புத்த பூர்ணிமா - சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள் விடுமுறை
மே 24 (செவ்வாய்): காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் - சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை
மே 28 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
இந்த விடுமுறை தினங்களில் 24 மணி நேரமும் அனைத்து ஏடிஎம்கள், பணவரித்தனை செயலிகள் அனைத்தும் இயங்கும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படவாய்ப்பிருக்காது.