EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு
EPFO Rules Changed: பி.எஃப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
EPFO Rules Changed: பி.எஃப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான புதிய விதி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பி.எஃப்., கணக்கு:
வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளை EPFO மாற்றியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முன்பணம் பெறுவதற்கான கோவிட்-19 அட்வான்ஸ் என்ற ஆப்ஷனை உடனடியாகநிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, வருங்கால வைப்பு நிதி பயனாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டது. இதேபோன்று கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியதும், 2021ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி முதல் மீண்டும் கொரோனா அட்வான்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இனி கொரோனா அட்வான்ஸ் மூலம் பணம் எடுக்க முடியாது:
இந்நிலையில், ஜுன் 12, 2024 தேதியிட்ட EPFO சுற்றறிக்கையின்படி, கோவிட்-19 இனி ஒரு தொற்றுநோய் அல்ல. இதன் காரணமாக கோவ்ட்-19 அட்வான்ஸ் என்ற பெயரில் முன்பணம் வழங்கப்பட்டு வந்த திட்டத்தை, உடனடியாக நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த விலக்கு அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும். இது குறித்து அனைத்து அறக்கட்டளைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKY) இன் கீழ் EPF கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான ஏற்பாடு மார்ச் 2020 இல் முதலில் அறிவிக்கப்பட்டது. ஜூன் 2021 இல், தொழிலாளர் அமைச்சகம் EPF உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்குகளில் இருந்து, கொரோனா வைரஸ் தொடர்பான அவசர நிதி தேவைக்கு முன்பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. அதற்கு முன்னதாக, EPF உறுப்பினர்களுக்கு ஒரு முறை மட்டுமே முன்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா அட்வான்ஸ் நிறுத்தப்பட்டது பயனாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகள்
EPFO தனது உறுப்பினர்களை மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது EPF கணக்கில் இருக்கும் தொகையில் 75% வரை திரும்பப் பெற அனுமதிக்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் இதில் எது குறைவாக இருந்தாலும் திரும்பப் பெறலாம். இருப்பினும், உறுப்பினர்கள் குறைந்த தொகைக்கு விண்ணப்பிக்கலாம். வீடு வாங்குவதற்கும், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், திருமணம் செய்வதற்கும், கல்வி செய்வதற்கும் முன்பணம் கோரலாம்.