EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?
எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லை பென்சன்.. மாத சம்பளம் வாங்கும் அனைத்துத் தொழிலாளர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ( Employment provident Fund) பென்சன் வழங்கப்படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது. இதோடு மட்டுமின்றி அவரச காலங்களில் பணம் தேவைப்படும் போது pf advance ஆகவும், பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக பணம் எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பிஎப் பென்சன் வாங்கும் ஊழியர்கள் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திருத்தத் திட்டத்திற்கு எதிராகவும், இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் பட்சத்தில் பென்சன் தொகை பல மடங்கு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படின்னா இதுவரை எவ்வளவு பென்சன் தொகையை இபிஎப் நிர்ணயம் செய்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருந்தால், இதோ அதற்கான பதிலை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக அரசு ஊழியர்கள் மட்டுமில்லாமல் மாத சம்பளம் வாங்கும் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பணத்தைச் சேமிக்க அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பினைக் கொண்டுள்ளது. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 15 ஆயிரம் என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதேப்போன்று ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அவர்களின் பென்சன் தொகையும் ரூ.15 ஆயிரத்திலிருந்து தான் கணக்கிடப்படுகிறது.
இதனால் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய ஊழியர்களும் பெரும் இழப்பு ஏற்படும். எனவே இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழிலாளர் வைப்பு நிதி நிர்ணயித்துள்ள வரம்பை உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வரை பல கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஊழியர்களுக்கு சாதகமாக அடிப்படை சம்பள வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமும், அதிக வரவேற்பும் உள்ளது.