சிறுசேமிப்பு வட்டிவிகிதம் குறைப்பை வாபஸ் பெற்றார் நிர்மலா சீதாராமன்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு, திரும்பப் பெறப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள வட்டி விகிதம் தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னதாக, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு மக்களிடத்தில் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்தியதன் காரணமாக, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India
— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021

நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில், "இந்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், 2020-2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த விகிதங்களில் தொடரும். முந்தைய அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது"என்று பதிவிட்டார்.
அஞ்சலக மாதாந்திர சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்புத்திட்டம்(சுகன்யா சம்ரிதி கணக்கு), செல்வமகள் சேமிப்புத்திட்டம்(சுகன்யா சம்ரிதி கணக்கு) போன்ற சிறுசேமிப்பு திட்டங்கள் அரசின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் நிலைமைக்கு ஏற்ப சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி நிர்ணயம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.