Share Market: பங்குச் சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 24,200 புள்ளிகளையும் நெருங்கியது
Share Market: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது.
Share Market: இந்திய பங்குச்சந்தை இன்று இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை:
ஐடி நிறுவனங்களின் லாபம் மற்றும் செப்டம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய பங்குச்சந்தை இன்று (ஜூலை 2) வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்ட் சாதனை படைத்துள்ளது. இந்திய நேரம் நண்பகல் 09.21 நிலவரப்படி, NSE நிஃப்டி 50 ஆனது 0.21 சதவிகிதம் அதிகரித்து 24,186.5 புள்ளிகளாகவும், BSE சென்செக்ஸ் 0.22% உயர்ந்து 79,653.21 புள்ளிகளாகவும் இருந்தது.
முந்தைய அமர்வில் 2 சதவிகிதம் உயர்ந்திருந்த ஐடி பங்குகள் இன்று மேலும் 0.7% அதிகரித்தன. அனைத்து 13 முக்கிய துறைகளும் லாபம் கண்டதோடு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் முறையே 0.4% மற்றும் 0.2% ஏற்றத்தை பதிவு செய்தன.
இதற்கிடையில், ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து 83.56 ஆக இருந்தது. உலக சந்தையில் அமெரிக்க டாலரின் வலுவான மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர்களை வாங்குகின்றனர். இது ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் விளக்கினர்.
லாபம் - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
விப்ரோ, இன்ஃபொசிஸ், லார்சன், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிண்டால்கோ, ஹெச்.சி.எல். டெக்., சன் பார்மா,டெக் மஹிந்திரா, சிப்ளா, க்ரேசியம், டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., பவர்கிரிட் கார்ப், கோல் இந்தியா, ரிலையன்ஸ், ஓன்.என்.ஜி.சி, டாக்டர் ரெட்டி லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
ஸ்ரீராம் ஃபினான்ஸ், கோடாக் மஹிர்ந்திரா, டாடா மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபினான்ஸ், ஆக்ஸில் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, ஹீரோ மோட்டர்காஃப், டைட்டன் கம்பெனி, அதானி எண்டர்பிரைசர்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, என்.டி.பி.சி., அப்பல்லோ மருத்துவமனை, ஹெ.யு.எல்., மாருதி சுசூகி, நெஸ்லே, ஐ.டி.சி., டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.