வாரத்தின் முதல் வர்த்தக நாளில் மந்தமாக தொடங்கிய பங்கு வர்த்தகம்... இன்றைய நிலவரம்!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (திங்கள்கிழமை) மும்பை பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் மந்தமாக தொடங்கியது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (திங்கள்கிழமை) மும்பை பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் மந்தமாக தொடங்கியது.
மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ், 300 புள்ள்கிகள் குறைந்து 57,343 என்றளவில் இருந்தது. அதேபோல், தேசிய குறிப்யீட்டு எண் நிஃப்டி 17176 புள்ளிகள் என்றளவில் வர்த்தகமானது.
பங்கு வர்த்தகத்தின் சுணக்கமான துவக்கத்துக்கு இன்ஃபோசிஸ், ஹெர்டிஎஃப்சி வங்கி, மாருதி சுசுகிம் பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் மகிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆசிய சந்தைகளில் குறைந்து காணப்பட்டதின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல்,
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 153.71 புள்ளிகள் குறைந்து 57,542 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது ஆரம்பத்தில் மந்தமான போக்கை ஏற்படுத்தியது. தேசிய குறியுட்டு நிஃப்டி ஓரளவில் சுணக்கத்தில் இருந்து விலகி 17,200 என்றளவில் வர்த்தகமானது.
ப்ரீ ஒப்பனிங்கே சொல்லிவிட்டது:
இன்றைய பங்குவர்த்தகத்தின் போக்கு ஏற்ற இறக்கத்துடன் கலவையானதாகவே இருக்கும் என்பதை பங்குச்சந்தையின் ப்ரீ ஒப்பனிங் போக்கே சொல்லிவிட்டது. ஏனெனில் ப்ரீ ஓபனிங்கில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 581.25 புள்ளிகள் குறைந்து 58,277 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. நிஃப்டி 141 புள்ளிகள் குறைந்து 17,072 என்றளவில் வர்த்தகமானது.
முதல் 15 நிமிடங்களுக்குப் பின்னர் வர்த்தகம் சற்றே சூடு பிடித்தது. அப்போது சென்செக்ஸ் 57,624, நிஃப்டி 17176.10 என்று வர்த்தகமானது. நிஃப்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் வர்த்தகமாவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் என்று சொல்லலாம்.
ஆசிய, அமெரிக்கச் சந்தைகள் ஒரு பார்வை:
திங்கள்கிழமை, ஆசிய பங்குச் சந்தையின் போக்கைப் பார்த்தால் அது இன்றைக்கு இந்திய பங்குச் சந்தைக்கு கை கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும். ஹாங்காங்கின் ஹாங்செங் 1.16% சரிந்தது, சீனாவின் ஷாங்காய் இண்டக்ஸ் 0.46 குறைந்ததும் இன்று இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குசந்தையில் வர்த்தகம் சிவப்பில் முடிந்தது. டவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ் அண்ட் பி 500 ஆகியன மிகுந்த தொய்வான போக்கில் வர்த்தகமாகின. இதுவும் இன்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் எதிரொலி:
இதுதவிர, உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் முதலீட்டு சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க பங்குச்சந்தையில் 3 முக்கிய குறியீடுகளும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டது. இன்று காலை வரை இந்தியாவில் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. இதனால், பங்குச்சந்தைகள் மந்தமாக உள்ளன எனக் கூறுகின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள்.
இன்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது சென்செக்ஸ், நிஃப்டியின் போக்கு எப்படியிருக்கிறது என்பது இந்த வார முற்பாதிக்கான வர்த்தகப் போக்கை ஓரளவுக்கு உணர்த்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.