LIC Share Price: வரலாறு காணாத உயர்வை எட்டிய எல்.ஐ.சி பங்கின் விலை..!: எவ்வளவு தெரியுமா?
LIC Share Price: பங்குச் சந்தையில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ( LIC ) பங்கின் விலை அதிகரித்ததை தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்களில் 2வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
LIC Share Price Today: இன்றைய தினம் மும்பை பங்கு சந்தை வர்த்தகத்தில், எல்ஐசி பங்கு விலையானது வரலாறு காணாத உயர்வை எட்டியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத உயர்வு:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்கு விலையானது, பிஎஸ்இ.யில் ஒரு பங்கின் விலையானது ரூ.1,197 என அதிகரித்து புதிய சாதனையை எட்டியது. இன்ட்ராடே வர்த்தகத்தில் எல்ஐசி பங்கு விலை எக்ஸ்சேஞ்சில் அதிகரித்ததையடுத்து, அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் மதிய நேரத்தில், எல்ஐசி பங்கின் விலை 2.7 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூ 1,192 ஆக வர்த்தகமானது.
அதிகரித்த மூலதனம்:
எல்ஐசியின் சந்தை மூலதனமானது, இதுவரை இல்லாத அளவு ரூ. 7.56 டிரில்லியன் என்ற உச்சத்தை எட்டியது, இதனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது, இரண்டாவது பெரிய பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
ஒட்டுமொத்த மூலதன சந்தையின் தரவரிசையில், இந்தியாவின் எல்ஐசி, இந்தியாவில் எட்டாவது பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவ்ற்றின் வரிசையில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆண்டு 2024 இல், BSE இல் எல்ஐசி பங்கு விலை 39.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவரை ஜூலை மாதத்தில் இந்த பங்கு 17.3 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.