மேலும் அறிய

Budget 2024 Income Tax Slab: ரூ. 3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை! கழிவுத்தொகை 75, 000 ஆக அதிகரிப்பு

Budget 2024 Income Tax Slab Changes: 20224 - 25 ஆம் நிதியாண்டில் ரூ. 3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

New Income Tax Rate:  20224 - 25 ஆம் நிதி ஆண்டிற்கு 6 அடுக்குகள் கொண்ட புதிய வருமான வரி முறைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

பட்ஜெட் தாக்கல்:

முழு பட்ஜெட்டானது, பொதுவாக பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த வருடத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான கால வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து,  தேர்தல் முடிவடைந்த நிலையில்,  பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட்டார்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது , பலரும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

3 லட்சம் வரை வரி விலக்கு:

வருமான வரியில் Old Tax Regimeல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. New tax Regime-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வருமான வரி அடுக்குகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

1.ரூ. 3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை

2.ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5 % வரி விதிப்பு 

3. ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 % வரி விதிப்பு 

4.ரூ. 10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 % வரி விதிப்பு

5. ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 % வரி விதிப்பு  

6.15 லட்சத்திற்கு மேல்  30% வரி விதுப்பு 

மேலும், தற்போது வருமானத்தில் நிலையான கழிவுத்தொகை ரூ. 50, 000லிருந்து ரூ. 75, 000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Budget 2024 Income Tax Slab: ரூ. 3 லட்சம் வரை வரி  செலுத்த தேவையில்லை! கழிவுத்தொகை 75, 000 ஆக அதிகரிப்பு

IMAGE SOURCE: GOVERMENT OF INDIA 

இதற்கு முன்பு இருந்த வருமான வரி முறை: 

Budget 2024 Income Tax Slab: ரூ. 3 லட்சம் வரை வரி  செலுத்த தேவையில்லை! கழிவுத்தொகை 75, 000 ஆக அதிகரிப்பு

பழைய வருமான வரி படிநிலைகளில் ரூ.3 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், ரூ.7 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இத்துடன் நிலையான கழிப்புத்தொகையாக ரூ. 50, 000 அளிக்கப்பட்டிருந்தது. இதனால், ரூ. 7. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது. 

”வரி முறையை எளிமையாக்க முயற்சி”

மேலும், தற்போது இதற்கு முன் அறக்கட்டளைகளுக்கு விதிக்கப்பட்ட 2 வரி முறையை ஒன்றாக ஒரே வரியாக இணைக்கப்பட்டுள்ளது. 

வருமான வரி செலுத்துவோரில் , 3ல் 2பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர் என்றும் தொடர்ந்து நேரடி வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

Also Read: Budget 2024: 9 அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் : என்ன தெரியுமா?

Also Read: Budget 2024: ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி; பீகாருக்கு 26,000 கோடி: சிறப்பு நிதியால் சிறப்பாக கவனித்த மத்திய பட்ஜெட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
Annamalai:
Annamalai: "மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை" வீடியோவை வெளியிட்டதற்காக வருத்தம்!
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annapoorna Srinivasan apologizes Nirmala | நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்!Mamata Banerjee Resign | ’’ராஜினாமா செய்ய தயார்!’’மம்தா அதிரடி அறிவிப்பு..பரபரக்கும் மேற்கு வங்கம்PM Modi Chandrachud Controversy |தலைமை நீதிபதி இல்லத்தில் மோடி!கொதிக்கும் நெட்டிசன்ஸ்Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
Annamalai:
Annamalai: "மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை" வீடியோவை வெளியிட்டதற்காக வருத்தம்!
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
Annapoorna Srinivasan: “கோவை அன்னப்பூர்ணா உரிமையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்” அதிகார திமிர் என காட்டம்..!
Annapoorna Srinivasan: “கோவை அன்னப்பூர்ணா உரிமையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்” அதிகார திமிர் என காட்டம்..!
நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்: வானதி விளக்கம்!
நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்: வானதி விளக்கம்!
IND vs BAN 1st Test:என்ன மக்களே ரெடியா? சென்னை வந்த வீரர்கள்! டெஸ்ட் தொடருக்கு தயாரான இந்திய அணி
IND vs BAN 1st Test:என்ன மக்களே ரெடியா? சென்னை வந்த வீரர்கள்! டெஸ்ட் தொடருக்கு தயாரான இந்திய அணி
LIVE | Kerala Lottery Result Today (13.09.2024): நிர்மல் NR-397 கேரளா லாட்டரி..முதல் பரிசு 70 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
LIVE | Kerala Lottery Result Today (13.09.2024): நிர்மல் NR-397 கேரளா லாட்டரி..முதல் பரிசு 70 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
Embed widget