மேலும் அறிய

100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரசம் செய்யும் கரூர் குடும்பம் - புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை...!

’’கடந்த ஆண்டு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கியது போல வெள்ளியணை அதிரசத்திற்கும் புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை’’

நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிரசம் இல்லாத தீபாவளி பண்டிகைகளை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தீபாவளி பண்டிகையோடு அதிரசம் ஒன்றிவிட்டது. 

100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரசம் செய்யும் கரூர் குடும்பம் - புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை...!

இத்தகைய தொன்மைவாய்ந்த உணவின் அங்கமாக விளங்கும் பலகாரங்களில் ஒன்றான அதிரசம் தயாரிப்பில் கடந்த மூன்று தலைமுறைகளாக கரூர் அடுத்த வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (84) என்பவரது குடும்பம் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக முத்து நம்மிடம் பேசுகையில், 110 வருடங்களாக தொன்றுத்தொட்டு அதிரசம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். எனது தந்தை கோபால நாயக்கர் இந்த தொழிலை தொடங்கினார். அப்போதெல்லாம் காலணா, அரையணா என காசு கொடுத்து வாங்குவார்கள். அதுவும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் சுமார் 60 வருடங்களுக்கு முன் நாளொன்றுக்கு சுமார் 150 ரூபாய் வரை விற்பனையாகும்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரசம் செய்யும் கரூர் குடும்பம் - புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை...!

பச்சரிசி மாவு, வெல்லம், எள் ஆகியவற்றின் கலவையைப் பதமாக தயாரித்து, அவற்றை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தி சுடும்போது உருவாகும் வாசனை பக்கத்து தெரு வரை சென்று மக்களை இழுத்து வரும். இப்பகுதியில் உள்ள நீரின் தன்மையும் இதன் சுவைக்கு முக்கிய காரணம். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல வியாபாரம் இருந்தது. நாளொன்றுக்கு 5,000 அதிரசங்கள் வரை விற்போம். இப்போது தினமும் 500 அதிரசங்கள் வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரசம் செய்யும் கரூர் குடும்பம் - புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை...!

5 அதிரச துண்டுகள் கொண்ட' ஒரு பாக்கெட் 25 ரூபாய்க்கு  விற்கிறோம். அதை வியாபாரிகள் வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பார்கள். சம்பிரதாயத்திற்கு என்று திருவிழா, வீட்டு விஷேசம் போன்றவற்றிற்கு வாங்குகிறார்கள். முன்பெல்லாம், அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவு பண்டமாக அதிரசம் இருந்தது. ஆனால் இன்று அதிரசத்தை உண்டால்தான் அதிசயம் என்ற நிலைக்கு மாறிவிட்டது. பல்வேறு வண்ணங்களில் ரசாயன கலவையால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளின் தின்பண்டங்கள் நம் நாட்டிற்குள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

நம் முன்னோர்கள் கண்டறிந்த உணவு ஒவ்வொன்றிலும் அத்தனை அதிசயங்கள் புதைந்து கிடக்கிறது என்பதை நாகரீக மோகத்திற்கு அடிமையானவர்களுக்கு தெரிவதில்லை. பீட்சா, பர்க்கர் போன்ற வெளிநாட்டு துரித உணவுகளை உண்டு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உடல் அளவால் மட்டுமின்றி, மனதளவிலும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது நாகரீக சமுதாயம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரசம் செய்யும் கரூர் குடும்பம் - புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை...!

அதிரசத்தில் கலக்கப்படும் பச்சரிசி மாவு உடல் வலிமைக்கு உரியது. இயற்கையில் தயாரிக்கப்படும் வெல்லம், எள் ஆகியனவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதனால்தான் அதிரசம் என்ற உண்மையான ரசனையை நம் முன்னோர் உணவு பொருள்களில் ஒன்றாகப் பயன்படுத்தி வந்தனர். நாகரீக மோகத்தை கைவிட்டு, நம் முன்னோர் தந்த இயற்கை உணவுப் பண்டங்களான அதிரசம் போன்ற பொருட்களை நம் உணவில் பயன்படுத்த தொடங்கினால் எந்த நோயும் நம் அண்டாது என்பது நான் அறிந்த உண்மை. இன்று வரை இயற்கையான உணவு முறைகளை கடைப்பிடிப்பதால் இந்த வயதிலும் இந்த தொழிலை எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் உதவியுடன் தொடர முடிகிறது என்றார் அவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget