Chennai HC on Repco: வங்கி நோ.. நிதி நிறுவனம்தான்: ரெப்கோவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்
வங்கி என்பதை ரெப்கோ பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் அங்கீகாரம் பெறாததால், வங்கி என்ற வார்த்தையை ரெப்கோ பயன்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து வங்கி என்பதை ரெப்கோ பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ரெப்கோ வங்கி:
ரெப்கோவானது வங்கி சேவைகளுக்காக 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகிறது.
வழக்கு:
ரெப்கோ வங்கியானது, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை பெறவில்லை என்றும் அதனால், வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வங்கி என்பதை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரெப்கோ ஜூலை 28க்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் ரெப்கோவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடைக்கால தடை நீட்டிப்பு..!
Also Read: Gotabaya Rajapaksa: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வைரல்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்