Share Market: சரிவுடன் தொடங்கி ஏற்றத்தை நோக்கி நகரும் பங்குச் சந்தை..! சரிவில் டி.சி.எஸ்., விப்ரோ..
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தையானது சரிவுடன் தொடங்கி ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பங்குச் சந்தை நிலவரம்:
இந்திய பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியது. பின்னர், மெல்ல மெல்ல ஏற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், 33 புள்ளிகள் அதிகரித்து 61,193.94 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 18,166.65 புள்ளிகள் உள்ளது.
Sensex declines 61.98 points to 61,082.86 in early trade; Nifty dips 21.2 points to 18,138.75
— Press Trust of India (@PTI_News) November 22, 2022
லாபம்- நஷ்டம்:
அதானி போர்ட்ஸ், ஐடிசி, லார்சென், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ட்சிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
பணவீக்கத்தின் தாக்கம்:
கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகளில் சமீபத்திய வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இந்நிலையில், நுகர்வோர் விலையின் பணவீக்கம் மிதமாக காணப்படுகிறது.
இதனால், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் எழுச்சியைத் தொடரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, ஏற்றத்தை நோக்கி காணப்படுகிறது.
ரூபாய் மதிப்பு:
சீனாவில் நிலவி வரும் கொரோனா தாக்கத்தால், அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை குறைந்து காணப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது
Rupee rises 7 paise to 81.72 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 22, 2022
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 7 காசுகள் அதிகரித்து 81.72 ரூபாயாக ஆக உள்ளது.
Also Read: Petrol, Diesel Price: ஏற்றமா..? இறக்கமா..? பெட்ரோல், டீசல் விலை விலை இன்று எப்படி...?
Also Read: Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்