Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
Rain Alert: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Alert: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு:
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை வானிலை மையம், சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.
Sub: Depression over Westcentral and adjoining Southwest Bay of Bengal
— India Meteorological Department (@Indiametdept) November 22, 2022
The Depression over Southwest and adjoining Westcentral Bay of Bengal moved west-northwestwards with a speed of 6 kmph during past 6 hours and lay centred at 0530 hours IST of today, the 22nd November, 2022 pic.twitter.com/Azr27kvySv
சென்னைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
முன்னதாக, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வட-வடகிழக்கே 410 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து, பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.
Depression over Southwest and adjoining Westcentral Bay of Bengal moved west-northwestwards and lay centred at 2330 hours IST of 21st November over the same region, about 160 km east of Chennai, and 410 km north-northeast of Jaffna (Sri Lanka).
— India Meteorological Department (@Indiametdept) November 21, 2022
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.