Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை... அதிகரித்த டிசிஎஸ் பங்கு
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 402.73 புள்ளிகள் உயர்ந்து 62,533.30 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 110.85 புள்ளிகள் உயர்ந்து 18,608 புள்ளிகளாக உள்ளது.
Sensex jumps 402.73 points to settle at 62,533.30; Nifty climbs 110.85 points to 18,608
— Press Trust of India (@PTI_News) December 13, 2022
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 170.1 புள்ளிகள் உயர்ந்து 62,300.67 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 43.7 புள்ளிகள் உயர்ந்து 18,540.85 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில நாட்களாகவே மந்தமாக இருந்த பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது.
பணவீக்கத்தை குறைப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என சூழ்நிலை நிலவுகிறது. இதன் தாக்கத்தால், பங்கு சந்தை வளர்ச்சியின் வேகம் குறைந்தே காணப்படுவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Rupee drops 36 paise to close at 82.87 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) December 13, 2022
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 36 காசுகள் குறைந்து 82.87 ரூபாயாக ஆக உள்ளது.