தபால் அலுவலக வைப்புக்கணக்கு வங்கி கணக்கு தொடங்குவது எப்படி ?

தபால் அலுவலக  வைப்புக்கணக்கு வங்கியில் தற்போது எளிமையாக கணக்குகளை தொடங்க முடியும் . தபால் அலுவலகம் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கணக்குகளை தொடங்கலாம்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள  "தபால் அலுவலக  வைப்புக்கணக்கு வங்கி"யில் தற்போது எளிமையாக கணக்குகளை தொடங்க முடியும் . தபால் அலுவலகம் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கணக்குகளை தொடங்கலாம்.  மேலும் IPPB மொபைல் செயலி  நிலையான வங்கி வழங்கக்கூடிய மொபைல் சேவைகளை  வழங்குகிறது.தபால் அலுவலக வைப்புக்கணக்கு வங்கி கணக்கு தொடங்குவது எப்படி ?

தபால் வங்கி சென்று கணக்குகளை திறப்பதற்கான ஆவணங்கள் என்ன?

தபால் அலுவலக நேர வைப்புக்கணக்கு வங்கியில் நேரடியாக கணக்குகளை திறப்பதற்கு சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் .அடையாள அட்டை சான்றிதல் : இதில் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தலாம்

முகவரி சான்றிதல் : ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை , ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

வருமான வரி சான்றிதல் : மாத சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் , கடந்த 3 மாதங்களில் பெற்ற சம்பள விவர கணக்குகளுடன் , புகைப்படம் மற்றும் பூர்த்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  இது தவிற கடந்த 6 மாத வங்கிக்கணக்கு விவரங்களை கொடுத்தும் கணக்குகளை தொடங்கலாம்.கணக்கினை தொடங்கும் பொழுது ரூ 1000 வைப்பு நிதியாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில்  தபால் வங்கி கணக்கு தொடங்குவது  எப்படி ?

ஆன்லைனில் தபால் அலுவலக வைப்புநிதி வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு Https://ebanking.indiapost.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும்.

இதில் உங்களது அடிப்படை தகவல்களை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

தற்பொழுது பொது சேவை என்ற வசதியை க்ளிக் செய்து அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புதிய கோரிக்கை (new request ) என்பதை க்ளிக் செய்துக்கொள்ளவும். தற்பொழுது திறக்கும் புதிய பக்கத்தில்  மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு, KYC  ஆவணங்கள், பான் அட்டை நகல்  உள்ளிட்ட தேவையான‌ தகவல்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் submit என்ற பட்டனை க்ளிக் செய்துவிடவும் பிறகு உங்களுக்கான அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு விடும். பின்னர் இமெயில் மற்றும் மொபைல் எண் வாயிலாக உங்களுக்கான உறுதி தகவல் கிடைத்துவிடும்.

தபால் அலுவலக வைப்புக்கணக்கு வங்கி கணக்கு தொடங்குவது எப்படி ?

மொபைல் சேவை :

 IPPB மொபைல் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

உள்ளே சென்று புதிய கணக்கு தொடக்கம் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

அதில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் விவரங்களை கொடுக்கவும்

பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு  வரும் ஒ.டி.பியை பதிவு செய்ய வேண்டும். பிறகு  திறக்கப்படும் புதிய ஆவண பக்கத்தில் உங்கள் தனித்தகவல்களை பதிவு செய்யுது சரி என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

இந்த வங்கிக்கணக்கினை தனிநபராகவோ அல்லது கூட்டுக்கணக்காகவோ திறந்துக்கொள்ளலாம். இவ்வாறு தொடங்கப்படும் கணக்கினை ஒரு அஞ்சல் அலுவலக வங்கியில் இருந்து மற்றொரு அஞ்சல்  அலுவலக வங்கிக்கோ, ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கோ மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது

Tags: postel bank post office bank indian post bank post saving indian postsaving

தொடர்புடைய செய்திகள்

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!

பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!

Gold Silver Price Today: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்தது

Gold Silver Price Today: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்தது

Petrol and diesel prices Today: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

Petrol and diesel prices Today:  பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்