திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., வரிவிலக்கு இல்லை; நிர்மலா சீதாராமன்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., வில் விலக்கு அளிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது. அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் உள்ளிட்டவற்றை கொண்டு, தேவஸ்தான பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., வரிவிலக்கு இல்லை; நிர்மலா சீதாராமன்

உண்டியலில் பெறப்படும் தங்கம், நன்கொடையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாயும் அதில் அடக்கம். அவற்றிக்கு  ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை என்றாலும், அந்த லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும், அறைகளின் வாடகை கட்டணத்தின் மீதும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., வரிவிலக்கு இல்லை; நிர்மலா சீதாராமன்

  அதனால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி.,யாக, தேவஸ்தானம் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு தார்மீக நிறுவனம் என்பதால் தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளும், ஆந்திர அரசும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன.
 
இந்நிலையில், ஆந்திர மாநில எம்.பி., விஜயசாரதி ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும் போது, பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி  ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், என கோரிக்கை வைத்தார். 
அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நாட்டில் பல முக்கிய கோவில்கள் இருப்பதாகவும் அவற்றிக்கு வழங்கப்படாத ஜி.எஸ்.டி., விலக்கை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது,’ என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Tags: BJP tirupati tirupati devasthanam tirupathi lattu lattu thirumala thirumalai devasthanam thiurupathi lattu nirmala setharaman gst GST tax

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!