மேலும் அறிய

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

வாரத்தின் முதல் நாளில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,576க்கும், சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.36,608க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,935க்கும், சவரன் ரூ.39,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4565, சவரன் - ரூ.36,520

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4924, சவரன் - ரூ.39,392

ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,300 

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

TASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs SRH  LIVE Score: டெல்லி அணி அதிரடி பேட்டிங்; கட்டுப்படுத்துமா ஹைதராபாத்?
DC vs SRH LIVE Score: டெல்லி அணி அதிரடி பேட்டிங்; கட்டுப்படுத்துமா ஹைதராபாத்?
TN Voting Percentage: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்!
Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்!
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருமணத்தின் விருந்து.. டன் கணக்கில் காய்கறி நறுக்கிய பக்தர்கள்..
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருமணத்தின் விருந்து.. டன் கணக்கில் காய்கறி நறுக்கிய பக்தர்கள்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sasikanth Senthil  : ’’எல்லாருக்கும் நன்றிஎன்னை மன்னிச்சிடுங்க’’ சசிகாந்த் செந்தில் நெகிழ்ச்சிVijay Casts Vote : தேர்தல் விதிகளை மீறியதாக விஜய் மீது அதிரடி புகார் சிக்கலில் தளபதி?Lok Sabha Election  : அதிகாரிகளுடன் திமுக, அதிமுகவினர் கடும் வாக்குவாதம்! Mamata Banerjee Dance : முரசு கொட்டி நடனமாடிய மம்தா ’’தித்தாங்கு தாங்..’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs SRH  LIVE Score: டெல்லி அணி அதிரடி பேட்டிங்; கட்டுப்படுத்துமா ஹைதராபாத்?
DC vs SRH LIVE Score: டெல்லி அணி அதிரடி பேட்டிங்; கட்டுப்படுத்துமா ஹைதராபாத்?
TN Voting Percentage: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்!
Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்!
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருமணத்தின் விருந்து.. டன் கணக்கில் காய்கறி நறுக்கிய பக்தர்கள்..
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருமணத்தின் விருந்து.. டன் கணக்கில் காய்கறி நறுக்கிய பக்தர்கள்..
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Kavin: பெண் கெட்டப்பில் கவின்! ஷாக்கான ரசிகர்கள்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் யுவன் பாடல்!
Kavin: பெண் கெட்டப்பில் கவின்! ஷாக்கான ரசிகர்கள்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் யுவன் பாடல்!
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Embed widget