மேலும் அறிய

மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி மசோதா: என்ன எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) கொண்டு வரப்பட உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடைசியாக கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் எனப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இல்லவே இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். இதனால் அந்த விஷயங்கள் இது மிகவும் பயனளிக்கிறது. மேலும் இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோகரன்சிகளை முதலில் டாலர் கொண்டு வாங்க முடியும். குறிப்பாக பிட்காயின் கரன்சியை டாலர் வைத்து வாங்கலாம். இதர கிரிப்டோ கரன்சிகளை பிட்காயின் வைத்து வாங்கலாம். முதலில் கிரிப்டோ கரன்சி வாங்க இணையத்தில் வாலெட் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். 

கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது.  கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும். ஒரு கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து நௌன்ஸ், கிரிப்டோ ஹஸ் உள்ளிட்டவையும் சேர்த்து உருவாக்கப்படும். இவை ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியுடனும் இருக்கும். இது பொது ரிஜிஸ்டரை பயன்படுத்துவதால் இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது யாரை வாங்குகிறார்கள், யார் விற்கிறார்கள் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்திற்கு சற்று ஒட்டிய மாதிரி இருப்பது தான் கூகுள் டாக்ஸ். கூகுள் டாக்ஸ் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் அது இயங்கும் முறை பிளாக்செயின் முறை போல கிட்டத்தட்ட இருக்கும். 

பிட்காயின்- 1.2 டிரில்லியன் டாலர், ஈதரியம்-234 பில்லியன் டாலர், பினான்ஸ் காயின்- 87 பில்லியன் டாலர், எக்ஸ்.ஆர்.பி - 81 பில்லியன் டாலர், டீதர் - 45.4 பில்லியன் டாலர் இவை தான் இப்போதைக்கு உலகின் டாப் 5 கிரிப்டோகரன்சிகள்.

மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி மசோதா: என்ன எதிர்பார்க்கலாம்?

கிரிப்டோகரன்சி மசோதா.. என்ன எதிர்பார்க்கலாம்?

விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா தாக்கலாகலாம் என்றும், இல்லை அரசு இன்னமும் சற்று நேர அவகாசம் கோரலாம் என்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும், இந்த மசோதாவில் என்ன எதிர்ப்பார்க்கலாம் எனப் பார்க்கலாம். 

* அரசாங்கம் வரி விகிதத்தை அதிகமாக நிர்ணயிக்கலாம். அதாவது கிரிப்டோகரன்சி மூலம் லாபமடையும் தனிநபர், 30% வரி செலுத்த வேண்டி வரலாம். லாட்டரி, கேம் ஷோ, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற போட்டிகளில் கிடைக்கும் பரிசுத் தொகைக்கான வரி விதிப்பு போல் இதுவும் அதிகமாக இருக்கலாம். 

* நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு வாலெட் வேண்டும். அப்படி வாலெட் டோக்கன் வழங்குநர்கள் எனத் தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் வரிவிதிப்பு அமல்படுத்தப்படலாம்.

* இது நாணயம் என்பதால், இது ரிசர்வ் வங்கி சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். ஆகையால் அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கலாம்.

* Financial Action Task Force (FATF) என்பது ஓர் அரசு அங்கம். இது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாதத்துக்கு நிதி அளித்தல், கிரிப்டோ கரன்சி சதிகாரர்களின் ஆதாரமாகாமல் தடுத்தல் போன்றவற்றை இது செய்கிறது. கிரிப்டோகரன்ஸி மசோதாவில் அரசாங்கம் இந்த அங்கத்தின் முழு அறிக்கையையும் நம்பியுள்ளது. அதன் பரிந்துரைகளும் உள்ளடக்கத்தில் கொண்டு வரப்படலாம்.

* கிரிப்டோகரன்சியை தனிநபர்கள் ஆதிக்கம் செலுத்தும் பரிவர்த்தனையாக வைத்திருக்க அரசு விரும்பவில்லை. அதற்காகவே இத்தனை கெடுபிடி. 

* கிரிப்டோகரன்சிகளை மேற்பார்வையிட இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2021 என்ற மசோதா இப்போது நிறைவேறாவிட்டாலும் கூட இது தொடர்பான விவாதங்கள் மேற்கூறிய புள்ளிகளைத் தொட்டு விவாதங்கள் நடைபெறும் என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget