Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 1080 ஆக குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த பல வாரங்களாகவே தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாடகளாகவே தங்கம் உயர்ந்தும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று கொட்டும் மழையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1080 குறைந்துள்ளது. ரூபாய் 56 ஆயிரத்து 680க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 7 ஆயிரத்து 85க்கு விற்கப்பட்டு வருகிறது.
தடாலடியாக குறைந்த தங்கம் விலை:
சென்னையில் 22 காரட் நேற்று ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 220க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 760க்கு விற்கப்பட்டது. இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 135 குறைந்து ரூபாய் 7 ஆயிரத்து 85க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1080 குறைந்து ரூபாய் 56 ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 590க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60 ஆயிரத்து 720க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூபாய் 2 குறைந்து ரூபாய் 100க்கு விற்கப்படுகிறது.
தொடர்ந்து உச்சம்:
உலகிலே அதிகளவு தங்க நகைகளை பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் தங்கத்தின் பயன்பாடு மிக மிக அதிகம் ஆகும். நகைகளை ஆடம்பர மற்றும் ஆபரணப் பொருளாக மட்டுமின்றி அத்தியாவசிய பொருளாக நமது மக்கள் பயன்படுத்துகின்றனர். நெருக்கடியான காலத்தில் வங்கிகளில் வைத்து பணம் பெறுவதற்கு முக்கியமான பொருளாக தங்க நகைகள் உள்ளது.
மேலும், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்களிலும் நகைகள் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இதனால், தங்க நகைகள் வாங்குவதற்கு தினசரி மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதி வருகிறது. சர்வதேச அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் நிதி அமைப்புகள் வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைத்த பிறகு சில நாட்கள் தொடர்ந்து தங்கம் விலை தமிழ்நாட்டில் குறைந்தது. ஆனால், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.