Byjus : ஊழியர்கள் அதிர்ச்சி.. 2500 பேரை வேலையை விட்டு தூக்கும் பைஜூஸ் நிறுவனம்.. இதுதான் காரணமாம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி தொழில்நுட்ப சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது அது மிதமான நிலைக்கு வந்திருப்பதால் செலவுகளை குறைக்க பைஜூஸ் திட்டமிட்டு வருகிறது.
![Byjus : ஊழியர்கள் அதிர்ச்சி.. 2500 பேரை வேலையை விட்டு தூக்கும் பைஜூஸ் நிறுவனம்.. இதுதான் காரணமாம் byjus lays off 2500 employees to cut costs Byjus : ஊழியர்கள் அதிர்ச்சி.. 2500 பேரை வேலையை விட்டு தூக்கும் பைஜூஸ் நிறுவனம்.. இதுதான் காரணமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/b5a5e39a69ca061cc0be2d38e31eb1a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1.7 லட்சம் கோடி மதிப்புள்ள பைஜூஸ் நிறுவனம், தங்கள் குழுமத்திலிருந்து 2,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்விதொழில்நுட்ப சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது அது மிதமான நிலைக்கு வந்திருப்பதால் செலவுகளை குறைக்க பைஜூஸ் திட்டமிட்டு வருகிறது.
And now layoffs across Byjus, Whitehat Junior and Toppr https://t.co/exFdtzOgT8
— Chandra R. Srikanth (@chandrarsrikant) June 29, 2022
பைஜூஸ் டாப்பர், வைட் ஹாட் ஜூனியர் மற்றும் அதன் முக்கிய குழுமத்திலிருந்தும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், செயல்பாடுகள், உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு என குழுமத்தில் பணியாற்றி வந்த முழுநேர மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பைஜூஸ் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 27 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வாங்கிய இரண்டு நிறுவனங்களான டாப்பர் மற்றும் வைட் ஹாட் ஜூனியர் ஆகியவற்றிலிருந்து 1,500 ஊழியர்களை பைஜுஸ் பணிநீக்கம் செய்த நிலையில், ஜூன் 29 அன்று, அதன் முக்கிய செயல்பாட்டுக் குழுக்களில் இருந்து கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பப்பட்டுள்ளது.
குழு நிறுவனங்கள் முழுவதும் உள்ளடக்கம், தீர்வு எழுதுதல் மற்றும் வடிவமைப்பு குழுக்களை சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. சில குழுக்களில் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.
தங்களின் பெயர் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக முன்பு அவர்கள் வாங்கிய நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர், ஆனால், இப்போது அவர்கள் அதன் முக்கிய செயல்பாடுகளில் இருந்தும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.
டாப்பர் நிறுவனத்திலிருந்து மட்டும் சுமார் 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். சுமார் 300-350 ஊழியர்கள் டாப்பரிலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் 300 ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 1-1.5 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)