மேலும் அறிய

புதுச்சேரியில் சுயதொழில் தொடங்க வேண்டுமா? - மானியத்துடன் கடன் பெற உடனே விண்ணப்பியுங்கள்

புதுச்சேரி: சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி: சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையம் அறிவித்துள்ளது.

சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையம், பல்வேறு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தச்சர், படகு தயாரிப்பாளர், கவசம் தயாரிப்பாளர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, காலணி தைப்பவர், கொத்தனார், கூடை, பாய் தயாரிப்பவர், கயிறு நெசவாளர், பொம்மை தயாரிப்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலை தொடுப்பவர், சலவை தொழிலாளி, தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர் என, பயனாளிகள் பயன்பெறலாம்.

சுயதொழில் தொடங்க மாநில அரசின் ஊக்குவிக்கும் திட்டம்:

இத்திட்டத்தில் சேர புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது, வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம், மானியத்துடன் நிதியுதவி பெறலாம். புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பகுதியினரின் திட்ட செலவு ரூ.50 ஆயிரமாக இருந்தால் 50 சதவீதமும், காரைக்கால் மாவட்டத்தினருக்கு 55 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருப்பின் திட்ட செலவு 40 சதவீதம் அதிகப்பட்டசம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் edistrict.py.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய மேலாளரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்:

புதுச்சேரியில் தொடர்ந்து 3 ஆண்டு வசிப்பவராகவம், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். திட்ட செலவின அடிப்படையான தொழில்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு குறைவாகவும், உற்பத்தியை அடிப்படையாக கொண்ட தொழில்களுக்கு ரூ.10 லட்சம் குறைவாக இருந்தால் கல்வி தகுதி தேவையில்லை. உற்பத்திய அடிப்படையாக கொண்ட திட்டங்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகவும், தேவையை அடிப்படையாக கொண்ட திட்டங்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால், கல்வித் தகுதி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்திற்கான பயிற்சி 2 முதல் 3 வாரம் கட்டாயப் பயிற்சி

உற்பத்தியை அடிப்படையாக கொண்ட திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சமும், சேவையை அடிப்படையான திட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்கப்படும். வருமான வரம்பு இல்லை, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்திற்கான பயிற்சி 2 முதல் 3 வாரம் கட்டாயப் பயிற்சி வழங்கப்படும். தொழில் முனைவோர் செலுத்தவேண்டிய சொந்த பங்களிப்பு திட்ட வரைவு தொகையில் பொதுப்பிரிவு 10 சதவீதம், சிறப்பு பிரிவுக்கு 5 சதவீதம் அளிக்க வேண்டும்.

திட்ட வரைவு தொகையில் பொதுப்பிரிவிற்கு நகரப் பகுதியினருக்கு 15 சதவீமும், கிராம பகுதியில் 25 சதவீத மானியம், சிறப்பு பிரிவிற்கு நகர பகுதிக்கு 25 சதவீதமும், கிராம பகுதியில் 35 சதவீம் வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் கடன் வழங்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்

திட்டத்தை செயல்படுத்தும் முகமைகள், புதுச்சேரி மாவட்ட தொழில் புதுச்சேரி கதர் மற்றும் கிராமிய தொழில் வாரியம், ஒருங்கிணைப்பு முகமை கதர் மற்றும் கிராமிய தொழில் ஆணையம், விண்ணப்பங்களை https://www.kviconline.gov.in/pmegphome/index.jsp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget