மேலும் அறிய

Gold Rate Hike: பட்ஜெட் எதிரொலி.. வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்..! சாமானியர்கள் வேதனை..!

2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி உயர்த்தப்பட உள்ளதாகக் தெரிவித்திருந்தார்.

பட்ஜெட் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800 ஆக விற்பனையாகி வருகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475ஆக விற்பனையாகிறது.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு புதிய உச்சம்:

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.480 உயர்ந்து 46, 696 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,837 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி உயர்த்தப்பட உள்ளதாகக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடி ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சவரன் தங்கம் 43,360ஆக உயர்ந்ததே இதுவரை உச்சமாக இருந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 1.30 உயர்ந்து ரூ. 77.30க்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

நேற்று ரூ77 உயர்வு:

இதேபோல் நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 22 எனவும், மதியம் கிராமுக்கு ரூ.55 எனவும் மொத்தம் 77 ரூபாய் உயர்ந்தது.

தங்க ஆபரணங்கள்:

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.

அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.

தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

தங்க சேமிப்பு திட்டங்கள் : 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.

டிஜிட்டல் தங்கம் - டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம். 

தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget