மேலும் அறிய

Aadhar Free Update: ஆதார் கார்டு அப்டேட் இலவசம்: நெருங்கும் கெடு தேதி.. எப்படி அப்டேட் செய்வது?

ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aadhar Free Update: ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் பெறும் ஆதார்:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்:

ஆதார்  அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.  பொதுவாக ஆதார் அட்டையில் புகைப்படம், கருவிழி, பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும்.  இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.  ஆதார் அட்டை ஆவணங்களின் இலவச அப்டேட் கெடு முடிவடைகிறது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக  அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு, இலவசமாக ஆதாரை அப்டேட் செய்ய முடியாது. 

ஏதற்காக அப்டேட் செய்ய வேண்டும்?

ஆதார் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளை தவிர்ப்பது. மேலும், திருமணம் காரணமாக ஒரு நபரின் பெயர் மற்றும் முகவரியில் மாற்றங்கள் ஏற்படலாம். சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஒரு தன்னுடைய மொபைல் எண், இமெயில், முகவரி போன்றவற்றை மாற்றி இருக்கலாம். மேலும், குழந்தைகளின் ஆதார் விபரங்களை அப்டேட் செய்வதற்கு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இதன்படியே, ஒரு குழந்தை 15 வயதை தாண்டியவுடன் அவரது அனைத்து பயோமெட்ரிக்களும் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

ஆன்லையின் அப்டேட் செய்வது எப்படி ?

  • முதலில் https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • எனது ஆதார்" தாவலைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அங்கு 'My Aadhar' என்பதை கிளிக் செய்து, 'Update Your Aadhar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதில், உங்கள் ஆதார் நம்பரை எண்டர் செய்து captcha வெரிஃபிகேஷனை டைப் செய்ய வேண்டும். பின்னர், send otp என்பதை கிளிக் செய்யவும். 
  • உங்கள் எண்ணுக்கு வந்த ஓடிபிஐ எண்டர் செய்து login என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில் நீங்கள் அப்டேட் செய்ய நினைக்கும் தகவல்களை கவனமாக அப்டேட் செய்ய வேண்டும்.
  • உங்கள் அப்டேட் ரெக்குவஸ்ட் குறித்த ஸ்டேட்டஸை பற்றி தெரிந்துக் கொள்ள https://myaadhaar.uidai.gov.in/ என்ற வெப்சைட்டில் "check Enrollment & update status என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
  • உங்கள் URN நம்பர் மற்றும் captcha எண்டர் செய்து, உங்கள் அப்டேட் ரெக்குவஸ்டிற்கான ஸ்டேட்ஸை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget