Gpay, Paytm.. டிஜிட்டலா தங்கம் சேமிக்கணுமா? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..
டிஜிட்டல் தங்கத் தொழிலுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை.
டிஜிட்டல் கோல்ட் என்பது ஆன்லைனில் தங்கத்தை சேமித்து வைக்க உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு வழிமுறையாகும்.இவ்வகை சேமிப்பு முழுக்க முழுக்க டிஜிட்டலை சார்ந்தே இயங்குகிறது. இருந்தாலும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய இன்றைய இளம் முதலீட்டர்கள் அதிகம் விரும்புகின்றனர். டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளரும் நினைவில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை கீழே காணலாம்.
தர விவரங்கள் :
டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு முன் அதன் ஒரு பகுதியாக, வாங்குபவர் தங்களுடைய முதலீட்டுக்குத் தேவையான தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பாலான டிஜிட்டல் தங்க வழங்குநர்கள் 24K தங்கத்தை பிரத்யேகமாக வைத்திருப்பார்கள். இது மிக உயர்ந்த தூய்மையை உறுதி செய்வதற்காக சான்றிதழை கொண்டிருக்கும்.
வரி விலைப்பட்டியல் பெறவும்:
டிஜிட்டல் தங்கத்தில் உள்ள சிறம்சம் இது பல ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். இருப்பினும், PhonePe, PayTM, Amazon போன்ற இந்த தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில், டிஜிட்டல் தங்கம் தற்போது SafeGold, MMTC-PAMP India, Augmont போன்றவற்றால் விற்கப்படுகிறது. வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகள் அவர்களின் டிஜிட்டல் தங்கக் கணக்கில் பிரதிபலிக்கும் மற்றும் விற்பனையாளர் செல்லுபடியாகும் வரி விலைப்பட்டியல்களை வாங்குபவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவார். அதனை அவர்களது டிஜிட்டல் கணக்கில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்
வரம்பு இல்லை:
முதலீட்டாளர்கள் 1 ரூ மதிப்புள்ள டிஜிட்டல் தங்கத்தை கூட வாங்கலாம். ஏனெனில் தங்க வாங்குவதற்கு வரம்பு இல்லை. இருப்பினும், டிஜிட்டல் கோல்ட்டை 1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு KYC முக்கியம். இது சாதாரண நகை கடைகளில் வாங்குவது போன்றதுதான்.
வாங்கும் விலை மற்றும் விற்கும் விலையை அறிதல் :
தங்கம் வாங்கும் பொழுது விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட கூடுதல் தொகைக்குதான் வாடிக்கையாளர்கள் அதாவது வாங்குபவர்களுக்கு விற்பனை செய்வார்கள். வாங்குபவருக்கும் மற்றும் விற்பவருக்கும் இடையில் உள்ள விலையில் வித்தியாசம் spread என அழைக்கப்படுகிறது.வாடிக்கையாளர்கள் தங்களுடைய தங்கத்தை திரும்ப விற்கும்போது தங்கத்தின் மீது விதிக்கப்படும் 3% ஜிஎஸ்டி இழக்கப்படுகிறது, ஏனெனில் இறுதி வாடிக்கையாளர்களால் ஜிஎஸ்டி திரும்பப் பெற முடியாது, ஏனென்றால் இது வாட் பதிவு செய்யப்பட்ட வணிகமாகும்.
டிஜிட்டல் தங்க அங்கீகாரம் :
டிஜிட்டல் தங்கத் தொழிலுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன், டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் முதலீடு செய்ய வேண்டும்.. இதுவரை, பங்கு தரகர்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்வதைத் SEBI தடை செய்துள்ளது.