மேலும் அறிய

2000 Rupee Note: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் குழப்பமா..? அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே..!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்.பி.ஐ. அறிவித்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி இன்று ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்று அறிவித்துள்ளது. வரும் 23-ந் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் பணப்பரிவர்த்தனை மற்றும் ஆர்.பி.ஐ. அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பி.ஐ.பி. தளத்தில் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை கீழே தெளிவாக காணலாம்.

1.   ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016ல் இந்திய ரிசர்வ் வங்கிச்  சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், போதுமான அளவில் மற்ற விகிதாசாரத்தில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து, பின்னர் 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

பெரும்பாலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய இதர குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்" படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. தூய்மையான ரூபாய் தாள்  கொள்கை என்றால் என்ன?

பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் தாள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள கொள்கை இது.

3. 2000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனை நிலை நீடிக்குமா?

ஆம். 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ பரிவர்த்தனை அந்தஸ்தைத் தொடரும்.

4. 2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?

ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாகப் பெறலாம். இருப்பினும், அவர்கள் 2023 செப்டம்பர் 30,  அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

5. கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்கள் அவர்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ வங்கிக் கிளைகளை அணுகலாம். கணக்குகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30ந் தேதி  வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும். ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் மாற்றும் வசதி செப்டம்பர் 30 வரை வழங்கப்படும்.

(அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம்)

6.  2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?

வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டப்பூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.

7.  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செயல்பாட்டு வரம்பு ஏதேனும் உள்ளதா?

பொதுமக்கள்  2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூபாய் 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

8. வங்கிகளின் துணை அமைப்புகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?

ஆம். வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ 4000/- என்ற வரம்பு வரை இத்தகைய துணை அமைப்புகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

9. எந்த தேதியிலிருந்து மாற்றிக்கொள்ளும் வசதி கிடைக்கும்?

ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களையோ மே 23ந் தேதி  முதல் அணுகி மாற்றும் வசதியைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10. வங்கியின் கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?

இல்லை. கணக்கு வைத்திருக்காதவர் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த வங்கி கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ 20,000 என்னும்  வரம்பு வரை மாற்றிக்கொள்ளலாம்

11. ஒருவருக்கு வேறு நோக்கங்களுக்காக ரூ 20,000க்கு மேல்  பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?

கட்டுப்பாடுகளின்றி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.

12. மாற்றிக் கொள்வதற்கு  ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. இந்த வசதி இலவசமாக வழங்கப்படும்.

13. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் இருக்குமா?

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/ டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

14. ஒருவரால் 2000 ரூபாய் நோட்டை உடனடியாக டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?

முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ரூ 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

15. ஒரு வங்கி 2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?

சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றால் அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றால், புகார்தாரர், ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (RB-IOS), 2021 இன் கீழ் RBI இன் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget