Year Ender 2024: என்னா ஸ்டைலு..! என்னா லுக்கு..! 2024ல் அறிமுகமான சிறந்த சொகுசு கார்கள் - வசதிகளும், அம்சங்களும்
Year Ender 2024 Luxury Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Year Ender 2024 Luxury Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான சிறந்த 5 சொகுசு கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2024ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் பட்ஜெட்டுக்கு ஏற்றது முதல் சொகுசு கார்கள் வரை பல கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உள்நாட்டில் விற்கப்படும் அனைத்து சொகுசு கார்களிலும், சொகுசு எஸ்யூவிகளே அதிக பங்களிப்பை வழங்குகின்றன. அதன்படி, 2024 ஆம் ஆண்டில், பல பிராண்டுகள் தங்கள் வாகனங்களைப் புதுப்பித்துள்ளன. பல புதிய சலுகைகளையும் பெற்றுள்ளன. அந்த வகையில் நடப்பாண்டில் அறிமுகமான சிறந்த சொகுசு கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2024ன் டாப் 5 சொகுசு கார்கள்:
1. ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட்
விலை: ரூ. 88.66 லட்சம்
ஆடி க்யூ7 இன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வடிவமைப்பில், முந்தைய எடிஷனை காட்டிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 3-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V6 பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 340 PS ஆற்றலையும் 500 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் வழங்குகிறது. பனோரமிக் சன்ரூஃப், நான்கு மண்டல ஏசி, 8 ஏர்பேக்குகள் மற்றும் ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
2. கியா EV9
விலை - ரூ 1.30 கோடி
கியா இந்தியா கார்னிவல் லிமோசினுடன் EV9 மாடலை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது 99.8 kWh பேட்டரி மற்றும் இரட்டை மின்சார மோட்டார்கள் கொண்ட டாப்-ஸ்பெக் மாடலாகும். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 384 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்த பிறகு 561 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. இதில் பல பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
3. Porsche Macan EV
விலை: ரூ.1.22 கோடி முதல் ரூ.1.69 கோடி.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ஷேயின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இதுவாகும். இது 100 kWh பேட்டரி மற்றும் 800V கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 584 பிஎஸ் பவரையும், 1,130 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிமீ வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
4. மசெராட்டி கிரேகேல்
விலை: ரூ.1.31 கோடி முதல் ரூ.2.05 கோடி.
Maserati இன் புதிய சொகுசு SUV Grecale கார் மாடலானது GT, Modena மற்றும் Trofeo டிரிம்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் GT மற்றும் Modena 2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் Trofeo 3-லிட்டர் V6 இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 530 PS ஆற்றலையும் 620 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இதன் உட்புறம் நவீன மற்றும் குறைந்தபட்ச தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஃபேஸ்லிஃப்ட்
விலை: ரூ.10.50 கோடியில் இருந்து தொடங்குகிறது
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனின் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 571 PS ஆற்றலையும் 850 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. லிட்டருக்கு 6.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. ஃபேஸ்லிஃப்ட் புதிய ஒளிரும் கிரில், புதிய 23-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது