12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன்(24/12/2024)

Published by: ABP NADU

மேஷம்

இன்றைய நாளில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கான பலன்கள் கைகூடும். சற்று அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும்

ரிஷபம்

வெகு நாட்களாக இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகி சுகம் நிறைந்த நாளாக அமையும்

மிதுனம்

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். கலை சார்ந்த வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்

கடகம்

இன்றைய நாளில் உங்கள் சிந்தனைகள் மேம்பட்டு வரவு நிறைந்த நாளாக அமையும். இருப்பினும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது

சிம்மம்

வீட்டினர் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். செலவுகள் நிறைந்த நாள்

கன்னி

இன்று உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது

துலாம்

உங்கள் பேச்சால் அனுகூலம் பிறக்கும். சற்று ஆர்வத்தோடு செயல்பட்டால் நீண்ட நாட்கள் இருந்து வந்த தடங்கல் மறையும்

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.சுபகாரியங்கள் கைகூடும்படி இந்நாள் இருப்பதால் களிப்பும் மிகுதியாக இருக்கும்

தனுசு

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெற்றிகள் உண்டாகும்

மகரம்

இன்று உங்கள் கவலைகள் மறையும் நாளாக இருப்பதால் சற்று விவேகமாக நடந்துகொள்வது மிகவும் நல்லது

கும்பம்

அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கவனத்துடன் சிந்தத்துச் செயல்பட்டால் பிரச்சனைகள் நேரும் வாய்ப்பு குறையும்

மீனம்

உங்களின் இந்த நாள் பெருமை சேர்க்கும் விதமாகும் மேன்மை ஏற்படும் நாளாகவும் அமையும். எதிர்பார்த்திராத முன்னேற்றங்களும் வாய்ப்புகளும் கிடைக்கும்